மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்ஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாசட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

7. வெறிவிரவு கூவிள - பாடல் 5

ஒரு பிறப்பிலான் என்று இங்கே சிவபெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

Updated On :20 நவம்பர் 2015, 6:44 am

ஒரு பிறப்பிலான் அடியை உணர்ந்தும் காணார் உயர்கதிக்கு வழிதேடிப் போக மாட்டார்
வருபிறப்பு ஒன்று உணராது மாசு பூசி வழி காணாதவர் போல்வார் மனத்தனாகி
அருபிறப்பை அறுப்பிக்கும் அதிகையூரன் அம்மான் தன் அடியிணையே அணைந்து வாழாது
இரு பிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல் கேட்டு ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

விளக்கம்

ஒரு பிறப்பிலான் என்று இங்கே சிவபெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இளங்கோ அடிகளார் சிலப்பதிகாரத்தில், பிறவா யாக்கைப் பெரியோன் என்று பூம்புகார் தலத்தில் உறையும் சிவபெருமானை குறிப்பிடுவது நாம் இங்கே நினைவுகூரத்தக்கது. முதல் நான்கு பாடல்களில், சமணரோடு கலந்து பழகிய நாட்களில் தான் சிவபெருமானை இகழ்ந்து பேசியதற்காக வருத்தப்படும் அப்பர் பிரான், தான் அவ்வாறு இருந்ததற்கு என்ன காரணம் என்பதை சற்று நினைத்துப் பார்க்கின்றார். சமணர்களின் சொற்களை கேட்டு, ஏதும் சிந்தியாமல் அவர்களைப் பின்பற்றி தானும் சிவபெருமானை இகழ்ந்ததை நினைத்து வருந்துகின்றார். வெறுவியர் = வீணாகக் கழித்தவர்கள்: கிடைத்தற்கரிய மானிடப் பிறவியை பயன்படுத்தி சிவபெருமானை வழிபாட்டு உய்வதனை விடுத்தமையால் மறுமையில் பேரின்பமாகிய முக்தி நிலையை பெறமுடியாது. மேலும் இந்த பிறவியில் சமணத் துறவிகள் தங்களது உடலினை பல விதத்திலும் வருத்திக்கொண்டு வாழ்ந்ததால் இந்த பிறவியும் இன்பம் ஏதும் துய்க்காமல் வீணே கழிக்கப்பட்டது என்பதால் இரு பிறப்பும் வெறுவியராய் இருந்தார் என்று சமணத் துறவிகளை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

குருடர்கள் தாம், தாங்கள் செல்ல வேண்டிய வழியை உணர முடியாமல் தடுமாறுவார்கள். அறியாமை எனும் இருளில் மூழ்கி, உயிரினுக்கு நற்கதியை ஈட்டித் தரும் வழியில் செல்லாதவர்களாக, அகக்கண் குருடர்களாக சமண குருமார்கள் இருந்தமையால். வழி காணாதவர் போல்வார் என்று அவர்களை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை

பிறப்பில்லாத தன்மையனாகிய சிவபெருமானின் திருவடிகளை மனதில் நினைக்காமல் வாழ்பவர்களும், பிறப்பு இறப்புச் சுழலில் சிக்கி அவதிப்படும் உயிர் என்ற நிலையிலிருந்து உயர் கதியான முக்தி நிலையினை அடையும் வழியினைத் தேடிச் செல்லாமலும், முக்தி நிலையினை அடையும் வரையில் பிறப்பு என்பது தொடர்ச்சியாக அனைத்து உயிர்களுக்கும் உண்டு என்பதை உணராமல் வாழ்பவர்களும், நீராடாததால் உடலின் புற அழுக்கினை நீக்காமல் எப்போதும் மாசு படிந்த உடலினை உடையவராக இருப்பவர்களும், சிவபெருமானை வழிபடாததால் நற்கதிக்கு அழைத்துச் செல்லும் மார்க்கத்தினை உணராமலும், பிறப்பிறப்புச் சுழற்சியின் தொடர்பினை அறுக்கும் வல்லமை வாய்ந்த அதிகை நகரத்து இறைவனின் திருவடிகளைச் சாராமலும், மொத்தத்தில் இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டு பிறவிகளையும் வீணாக கழித்தும் வாழ்ந்து வந்த சமணர்களின் சொற்களைக் கேட்டு, நான் பண்டைய நாட்களில், அதிகை இறைவனாகிய உன்னை இகழ்ந்தது எனது மடமைச் செயல். என்னே பரிதாபம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.