ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

14. அரவணையான் சிந்தித்து - பாடல் 5

காலில் கழல் மற்றும் சிலம்பு அணிந்த திருவடிகள் என்று இங்கே அப்பர் பெருமான் குறிப்பிடுகின்றார்.

Updated On :29 ஜனவரி 2016, 7:40 am

ஒரு காலத்து ஒன்றாகி நின்ற அடி ஊழி தோறூழி
உயர்ந்த அடி
பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய
வல்ல அடி
இருநிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ
ஏறும் அடி
திருவதிகைத் தென்கெடில நாடன் அடி திருவீரட்டானத்து எம்
செல்வன் அடி

விளக்கம்

ஒரு காலத்து ஒன்றாக நின்ற அடி = ஏகபாத திரிமூர்த்தியாக இறைவன் இருக்கும் நிலை. முற்றூழிக் காலம் முடிந்த பின்னர், மறுபடியும் உலகினைத் தோற்றுவிக்கத் திருவுள்ளம் கொள்ளும் சிவபெருமான் ஒற்றைக் கால் உடையவராக, தனது இடது புறத்திலிருந்து திருமாலையும் வலது புறத்திலிருந்து பிரமனையும் தோற்றுவிக்கின்றார் என்று புராணம் கூறுகின்றது. திருவொற்றியூர் திருக்கோயிலின் வடக்கு பகுதியில், மகிழ மரத்திற்கு அருகில், பிராகாரத்தின் வெளிச்சுவற்றில் பொறிக்கப்பட்ட ஏகபாத திருமூர்த்தியின் உருவத்தை நாம் காணலாம். மானும் மழுவும் தாங்கி உள்ள சிவனை, இரு புறமும் பிரமனும் திருமாலும் சூழ்ந்து இருப்பதையும் அவர்கள் தொழுவதையும் காணலாம். சிவனின் இடுப்பிலிருந்து பிரமனும் திருமாலும் பிரிவதுபோல் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில், அவர்கள் இருவரும் தங்களது ஒரு காலை மடித்து இருப்பதையும் காணலாம். பிரமனை ஜபமாலை மற்றும் கமண்டலத்துடனும், திருமாலை சங்கு சக்கரத்துடனும் நாம் காணலாம். இந்த சிற்பம் ஒற்றைக் கல்லால் ஆன சிற்பம், இதைப் போன்ற சிற்பம் ஆனைக்காவிலும் உள்ளது.

காலில் கழல் மற்றும் சிலம்பு அணிந்த திருவடிகள் என்று இங்கே அப்பர் பெருமான் குறிப்பிடுகின்றார். கழல் ஆண்கள் காலில் அணியும் அணிகலன். சிலம்பு பெண்கள் அணிவது. இவ்வாறு ஆண்களும் பெண்களும் அணியும் அணிகலன்கள் அணிந்த திருவடி என்று குறிப்பிடுவதன் மூலம், மங்கைபங்கனாக இறைவன் நிற்கும் நிலை இங்கே உணர்த்துப்படுகின்றது. தோடும் குழையும் அணிந்த பெருமான், என்று பல தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்படுவதை இங்கே நாம் நினைவுகூர்தல் பொருத்தமாகும். பிரமனாகவும் திருமாலாகவும் உள்ள நிலையைக் குறிப்பிடும் பாடலில், மாதொரு பாகனின் நிலை உணர்த்தப்படுவது பாடலின் நயம்.

பொழிப்புரை

முற்றூழிக் காலம் முடிந்த பின்னர், உலகினை மறுபடியும் தோற்றுவிக்கும் எண்ணத்துடன் பெருமான் இருந்தபோது, பிரமன் மற்றும் திருமால் ஆகிய உருவங்களையும், தனது உடலிலிருந்து தோற்றுவித்த நிலையில், மூவருக்கும் ஒரே அடியாகத் திகழ்ந்த அடி சிவபெருமானின் திருவடியாகும். ஒவ்வொரு ஊழிக்காலம் முடிந்த பின்னர் ஊழி வெள்ளத்தில் அழியாமல் உயர்ந்து நின்ற திருவடிகள் அவை. ஒரு காலினில் கழல் ஆபரணமும் மற்றொரு காலில் சிலம்பும் ஒலிக்குமாறு அணிந்த திருவடிகள் இவை. புகழ்ந்து பாடுபவர்களின் உரைகள், பெருமானின் பெருமையை முழுவதும் கூற முடியாத அளவுக்கு பெருமை படைத்த திருவடிகள் இவை. பெரிய நிலவுலகத்தில் உள்ளோர், இன்பத்துடன் புகழும் திருவடிகள் இவை. பெருமானைப் புகழ்வதால் தங்களது உள்ளம் குளிர்ந்த அடியார்கள், மலர்கள் இட்டு வணங்கும் திருவடிகள் இவை. இத்தகைய பெருமைகள் வாய்ந்த திருவடிகள், தென்கெடில நதிக்கரையில் அமைந்துள்ள திருவதிகை நாட்டின் தலைவனாகிய சிவபெருமானின் திருவடிகள். அவன்தான் அதிகை திருவீரட்டானத்தின் செல்வனாக விளங்குகின்றான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.