ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

15. கோணல் மாமதி - பாடல் 7

இடுப்பிலே கோவண ஆடையினை அணிந்தவனும், தான் வரும் வழியெல்லாம் தனது நீரலைகளைப் பாய்ச்சி வளம் கொழிக்கும் கெடில நதிக் கரையில்

Updated On :15 பிப்ரவரி 2016, 10:30 am

பாடல் 7

அரையார் கோவண ஆடையன் ஆறெலாம்
திரையார் ஒண்புனல் பாய் கெடிலக்கரை
விரையார் நீற்றன் விளங்கு வீரட்டம்
கரையேன் ஆகில் என் கண் துயில் கொள்ளுமே

விளக்கம்

கரைதல் = சொல்லுதல். அரையார் = இடுப்பில் பொருந்திய. ஆறு = வழி. விரையார் = நறுமணம் உடைய.

பொழிப்புரை

இடுப்பிலே கோவண ஆடையினை அணிந்தவனும், தான் வரும் வழியெல்லாம் தனது நீரலைகளைப் பாய்ச்சி வளம் கொழிக்கும் கெடில நதிக் கரையில் அமர்ந்தவனும், நறுமணம் வீசும் திருநீற்றினை உடலில் பூசியவனாக விளங்குபவனும் ஆகிய திருவதிகை வீரட்டானத்துச் செல்வனை, புகழ்ந்து சொல்லாவிடில் எனது கண்கள் உறக்கம் கொள்ளாது. எனவே நான் தினமும் அவனது புகழ்களை சொல்லுவேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.