ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

15. கோணல் மாமதி - பாடல் 10

பலவிதமான அணிகளையும், பூணூலையும், மாலைகளையும், மிகவும் பொருத்தமாகத் தனது உடலில் அணிந்தவனும்

Updated On :15 பிப்ரவரி 2016, 10:36 am

பாடல் 10

பூணாண் ஆரம் பொருந்த உடையவர்
நாணாக வரை வில்லிடை அம்பினால்
பேணார் மும்மதில் எய்தவன் வீரட்டம்
காணேன் ஆகில் என் கண் துயில் கொள்ளுமே

விளக்கம்

பொருந்த = தமக்குப் பொருத்தமான வகையில். பூண் = அணிமணிகள். நாண் = கயிறு. இங்கே பூணூல் என்று கொள்ள வேண்டும். ஆரம் = மாலை. பேணார் = சிவபெருமானைப் போற்றி வழிபடாத முப்புரத்து அரக்கர்கள். பேணார் என்ற சொல்லுக்கு மறை நெறியைப் பேணாதவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம், முதலில் வைதீக நெறியை பின்பற்றியும், சிவபெருமானை வழிபட்டும் வாழ்ந்து வந்த திரிபுரத்து அரக்கர்கள், திருமாலும் நாரதரும் ஏற்படுத்திய மயக்கத்தில் மறை நெறியினை மறந்தனர் என்று விஷ்ணுபுராணம் கூறுகின்றது. இந்த தகவல் பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.

திருமால் செய்த மாயத்தால் திரிபுரத்தில் வாழ்ந்த அரக்கர்கள் நீசர்களாக மாறினார் என்று நீலக்குடி பதிகத்தின் பாடலில் (5.72.5) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். முதலில் சிவபிரானை வணங்கிகொண்டு, வேத நெறிக்கு மதிப்பு கொடுத்துக்கொண்டு வாழ்ந்துவந்த காரணத்தால் சிவபிரான் அவர்களுடன் சண்டை செய்ய விரும்பவில்லை. திருமாலும் நாரதரும் சேர்ந்து செய்த சூழ்ச்சியால், அவர்கள் மனம் பேதலித்து, புத்த சமயத்தைச் சார்ந்து சிவபிரானை நிந்திக்க தொடங்கினர். இதனால் சிவபிரான் அவர்களை அழிக்க முற்படுகின்றார்.

நேச நீலக்குடி அரனே எனா
நீசராய் நெடுமால் செய்த மாயத்தால்
ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்து போய்
நாசமானார் திரிபுர நாதரே

திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் முதலில் வேதநெறியை கடைப்பிடித்து சிவபிரானை தொழுது வாழ்ந்ததாகவும், அதனால் அவர்கள் தேவர்களுக்கு கொடுமை செய்தபோதிலும் அவர்களுடன் போர் செய்ய சிவபிரான் உடன்படாத நிலையும், திருமால் ஒரு வேதியர் உருவம் கொண்டு திரிபுரங்கள் சென்று அரக்கர்களின் மனதில் மயக்கத்தை தோற்றுவித்து அவர்களின் சிந்தனையைக் கெடுத்து அவர்களை வேதநெறியிலிருந்து வழுவி சிவ நிந்தனை செய்யும் அளவுக்கு அவர்களை கெடுத்ததுவும், பின்னர் சிவபிரான் அவர்களை அழித்த வரலாறும் விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வரலாற்றில் திருமாலின் பங்கு, நம்மாழ்வாரால் திருவாய்மொழி பாசுரத்தில் (திருவாய்மொழி 5.10.4) கூறப்பட்டுள்ளது. இந்த பாசுரத்தில் சிவனும் திருமாலும் வேறு அல்லாமல் ஒன்றாக விளங்கினர் என்று நம்மாழ்வார் கூறுவதையும் காணலாம்

கள்ள வேடத்தைக் கொண்டு போய் புரம் புக்கவாறும் கலந்து அசுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னுடை வேறு அலாமை விளங்க நின்றதும்
உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே

பொழிப்புரை

பலவிதமான அணிகளையும், பூணூலையும், மாலைகளையும், மிகவும் பொருத்தமாகத் தனது உடலில் அணிந்தவனும், மேரு மலையினை வளைத்துச் செய்யப்பட்ட வில்லினில், வாசுகி பாம்பினை நாணாகக் கொண்டு வைத்த அம்பினால், தன்னைப் போற்றி வணங்கி வழிபடாத முப்புரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை அழித்தவனும் ஆகிய பெருமான் உறையும் இடம் திருவதிகை வீரட்டம். இந்த தலத்தையும் இங்கே வீற்றிருக்கும் இறைவனையும் காணாவிடில் எனது கண்கள் துயில் கொள்ளாது. எனவே அடியேன் பலமுறை இந்த தலத்தில் உள்ள பெருமானைக் கண்டு தொழுவேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.