ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

15. கோணல் மாமதி - பாடல் 11

மலையில் பொருந்தி விளங்கும் வயிரக் கற்கள் மற்றும் மாணிக்கக் கற்களைத் திரட்டிக் கொண்டு வரும்

Updated On :15 பிப்ரவரி 2016, 10:37 am

பாடல் 11

வரை ஆர்ந்த வயிரத் திரள் மாணிக்கம்
திரை ஆர்ந்த புனல் கெடிலக்கரை
விரையார் நீற்றன் விளங்கிய வீரட்டம்
உரையேன் ஆகில் என் கண் துயில் கொள்ளுமே

விளக்கம்

வரை = மலை. ஆர்ந்த = பொருந்திய. விரை = நறுமணம்.

பொழிப்புரை

மலையில் பொருந்தி விளங்கும் வயிரக் கற்கள் மற்றும் மாணிக்கக் கற்களைத் திரட்டிக் கொண்டு வரும் அலைகளை உடைய கெடில நதியின் கரையில் அமர்ந்துள்ளவனும், நறுமணம் மிகுந்த திருநீற்றினை உடலில் பூசியவனும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தின் புகழினைச் சொல்லாவிடில் எனது கண்கள் துயில் கொள்ளாது, எனவே நான் தினமும் அதிகை வீரட்டத்தின் புகழினையும், வீரட்டத்து இறைவனின் புகழினையும் உரைப்பேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.