ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

16. எட்டு நாண்மலர் கொண்டு - பாடல் 3

தெளிந்த நீர் பாயும் வயல்களை உடைய அதிகை நகரத்தில் கெடிலக் கரையில் உறையும் இறைவனாகிய பெருமான்,

Updated On :23 பிப்ரவரி 2016, 12:16 pm

பாடல் 3

கள்ளின் நாண்மலர் ஓரிரு நான்கு கொண்டு
உள்குவார் அவர் வல்வினை ஓட்டுவார்
தெள்ளு நீர் வயல் பாய் கெடிலக்கரை
வெள்ளை நீறணி மேனி வீரட்டரே

விளக்கம்

கள் = தேன். தெள்ளு = தெளிந்த.

பொழிப்புரை

தெளிந்த நீர் பாயும் வயல்களை உடைய அதிகை நகரத்தில் கெடிலக் கரையில் உறையும் இறைவனாகிய பெருமான், தனது மேனியில் திருநீற்றினை அணிந்து காணப்படுகின்றார். தேன் நிறைந்ததும் அன்று மலர்ந்ததும் ஆகிய எட்டு வகையான மலர்களைக் கொண்டு அவரை அர்ச்சித்து, தங்களது ஆழ்ந்த மனதினில் இறைவனை நினைக்கும் அடியார்களின் வலிமை வாய்ந்த வினைகளையும் பெருமான் ஓட்டுவார். எனவே எட்டு மலர்களைக் கொண்டு அவரை வழிபட்டு பயன்பெறுவீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.