ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

16. எட்டு நாண்மலர் கொண்டு - பாடல் 5

எட்டு வகையான தேன் பொருந்திய மலர்களை, பெருமானின் திருவடியில் இட்டு அவனை அர்ச்சித்து வணங்கித் தொழும் அடியார்களின் வினைகளைத் தீர்ப்பவர் சிவபெருமான். ம

Updated On :24 பிப்ரவரி 2016, 6:48 am

பாடல் 5

தேனப் போதுகள் மூன்றோடு ஓர் ஐந்துடன்
தான் அப்போது இடுவார் வினை தீர்ப்பவர்
மீனத் தண்புனல் பாய் கெடிலக்கரை
வேனல் ஆனை உரித்த வீரட்டரே

விளக்கம்

வேனல் = இளவேனிற் காலம். எனவே, வேனலான் என்பதற்கு இளவேனிற் காலத்துக்கு உரியவனாகிய மன்மதன் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் மன்மதன் எரிக்கப்பட்டான். அவனது தோல் உரிக்கப்படவில்லை. எனவே அவ்வாறு பொருள்கொள்வது பொருத்தமாகாது. வேனல் ஆனை = கோபம் உடைய யானை. போது = மலர். சில உரை ஆசிரியர்கள், உரித்த என்பதற்கு அழித்த என்று பொருள் கொண்டு, மன்மதனை எரித்த நிகழ்ச்சியை குறிப்பிடுவதாக கூறுகின்றனர்.

பொழிப்புரை

எட்டு வகையான தேன் பொருந்திய மலர்களை, பெருமானின் திருவடியில் இட்டு அவனை அர்ச்சித்து வணங்கித் தொழும் அடியார்களின் வினைகளைத் தீர்ப்பவர் சிவபெருமான். மீன்கள் பாயும் நீர்வளம் நிறைந்த கெடிலக் கரையில் உறைபவரும், மிகுந்த கோபத்துடன் தன்னை நோக்கிப் பாய்ந்து வந்த மத யானையை, அதன் தோலை உரித்துக் கொன்றவரும் ஆகிய வீரட்டத்து இறைவரை எட்டு மலர்களைக் கொண்டு வழிபட்டு பயன்பெறுவீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.