ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

16. எட்டு நாண்மலர் கொண்டு - பாடல் 7

சிவ ஆகமங்களில் குறிப்பிட்டவாறு சிறந்த மலர்களை, பெருமானது திருவடிகளில் இட்டு வணங்கி வழிபடும் அடியார்களை,

Updated On :24 பிப்ரவரி 2016, 7:09 am

பாடல் 7

உரை செய் நூல் வழி ஒண்மலர் இட்டிடத்
திரைகள் போல் வல்வினை தீர்ப்பரால்
வரைகள் வந்து இழி கெடிலக்கரை
விரைகள் சூழ்ந்து அழகாய வீரட்டரே

விளக்கம்

வரை = மலை. விரைகள் = நறுமணம் வீசும் பொருட்கள். உரை செய் நூல் = சிவ ஆகமங்கள். திரைகள் = அலைகள்.

பொழிப்புரை

சிவ ஆகமங்களில் குறிப்பிட்டவாறு சிறந்த மலர்களை, பெருமானது திருவடிகளில் இட்டு வணங்கி வழிபடும் அடியார்களை, தொடர்ந்து வரும் கடலைகள் போன்று துரத்தி துன்புறுத்தும் வினைகளைத் தீர்ப்பவர் சிவபெருமான். எனவே உயர்ந்த மலையிலிருந்து நறுமணம் வீசும் பல பொருட்களைக் கொண்டுவந்து குவிக்கும் கெடில நதியினால் சூழப்பட்டுள்ள அதிகை நகரில் உரையும் வீரட்டரை, எட்டு மலர்களைக் கொண்டு வழிபட்டு பயன்பெறுவீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.