பாடல் 5
கருத்தனைக் கழிப்பாலையுள் மேவிய
ஒருத்தனை உமையாள் ஒரு பங்கனை
அருத்தியால் சென்று கண்டிட வேண்டும் என்று
ஒருத்தியார் உளம் ஊசலது ஆடுமே

விளக்கம்

கருத்தன் தலைவன். கர்த்தா என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். அருத்தி = மிகுந்த விருப்பம். சிவபெருமான் பால் தனது மகள் கொண்டுள்ள காதலின் தன்மையை முந்தைய பாடல்களில் விவரிக்கும் தாய், தனது மகளை கண்காணித்துக்கொண்டு வருகின்றாள். சிவபிரான் பால் ஆழ்ந்த காதல்கொண்டிருந்தாலும், தனது மகள் சிவபிரானைக் காண்பதற்காக வெளியே செல்லாமல் இருப்பதை உணர்கின்றாள். அதற்கு என்ன காரணம் என்பதை ஆராயும் தாய், பெண்களுக்கு இயற்கையாகவே உள்ள நாணம் தான் தனது மகள் சிவபெருமானை சந்திப்பதை தடுத்துள்ளது என்ற முடிவுக்கு வருகின்றாள். அதே சமயத்தில் சிவபிரானை சந்திக்க வேண்டும் என்ற ஆவல், தனது மகளின் உள்ளத்தில் நாளுக்கு நாள் அதிகமாவதையும் உணர்ந்த தாய், இருவேறு உணர்ச்சிகளுக்கு இடையே தனது மகள் தவிப்பதை இந்த பாடல் மூலம் சொல்கின்றாள்.

தலைவனாகிய சிவபிரானைக் காண வேண்டும் என்ற ஏக்கம் ஒரு புறமும், தான் சிவபிரான் பால் காதல் கொண்டுள்ளதை மற்றவர் அறிந்தால் நகைப்பார்களே என்ற நாணம் மறுபுறம் தனது மனதினை ஆட்கொள்ள, எந்த வழியிலும் செல்ல முடியாமல் அப்பர் நாயகி தவிப்பதாக இங்கே கூறப்படுகின்றது. உமையாள் ஒரு பங்கன் என்று சிவபிரானை குறிப்பிட்டு, அடுத்தவர் நகைக்கும் நிலை ஏன் என்பதையும் அப்பர் பிரான் குறிப்பால் உணர்த்துகின்றார். ஏற்கெனவே மணமான சிவபிரானை, தான் விரும்புவதை அறிந்தால் அடுத்தவர் நகைப்பார்கள் என்ற அச்சம் தலைவிக்கு உள்ள நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது. ஊஞ்சல் ஒரு சமயம் ஒரு கோடியில் இருந்தாலும், அடுத்த கணம் எதிர்கோடிக்குச் சென்றுவிடுகின்றது. ஆனால் அங்கே நிலையாக நில்லாமல் மறுபடியும் புறப்பட்ட இடத்திற்கே வருகின்றது. இவ்வாறு வருவதும் போவதுமாக இருக்கும் நிலை ஊசல் நிலை என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது. அப்பர் நாயகியின் மனமும் ஒரு நிமிடம், சிவபெருமான் மீது கொண்டுள்ள அன்பினால் அவனை நேரில் சென்று காண வேண்டும் என்று ஆசைப்படுகின்றது; ஆனால் அடுத்த கணமே அவளது நாணம் தயக்கத்தினை ஏற்படுத்த அவளது ஆசை அடக்கப்படுகின்றது. இவ்வாறு இருவேறு உணர்ச்சிகளின் இடையே சிக்கியுள்ள மகளின் நிலையை உணர்ந்தறியும் தாய் தனது பரிதாபத்தை வெளிப்படுத்தும் பாடல்.

பொழிப்புரை

அனைவர்க்கும் தலைவனாக விளங்கும் கழிப்பாலை நாயகனை, உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்திருக்கும் பெருமானை, தான் அவன் மீது கொண்டுள்ள அன்பின் மிகுதியால் அவனைக் காண வேண்டும் என்று மனம் விரும்பினாலும், தான் அவனைக் காணச் செல்வதை அறிந்தால் மற்றவர்கள் நகைப்பார்கள் என்ற நிலை மனதினில் அச்சத்தை தோற்றுவிக்க, இருவேறு உணர்ச்சிகளுக்கு இடையில் எனது மகளின் மனம் ஊசலாடுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ், தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு வெறுப்பு : மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

காரைக்குடி தொகுதி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதால் வளா்ச்சியில்லை: அண்ணாமலை யாரை சொல்கிறார்..?

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு