ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

30. வண்ணமும் வடிவும் - பாடல் 8

தனது அன்பினை ஆழமான உணர்ந்து, இறைவன் தன்னைத் தேடி வருவான் என்று இறுமாப்புடன் இருந்த அப்பர் நாயகியின் தன்மை பதிகத்தின் ஆறாவது பாடலில் நமக்கு உணர்த்தப்பட்டது.

Updated On :11 ஜூலை 2016, 10:18 am

பாடல் 8

பத்தர்கட்கு அமுதாய பரத்தினை
முத்தனை முடிவு ஒன்றிலா மூர்த்தியை
அத்தனை அணியார் கழிப்பாலை எம்
சித்தனைச் சென்று சேருமா செப்புமே

விளக்கம்

தனது அன்பினை ஆழமான உணர்ந்து, இறைவன் தன்னைத் தேடி வருவான் என்று இறுமாப்புடன் இருந்த அப்பர் நாயகியின் தன்மை பதிகத்தின் ஆறாவது பாடலில் நமக்கு உணர்த்தப்பட்டது. அவ்வாறு இறைவன் தன்னைத் தேடி வராததால் கவலை கொண்ட அவள், இறைவனே நீ எனக்கு அருளமாட்டாயா என்று வேண்டியதை பதிகத்தின் ஏழாவது பாடல் விளக்குகின்றது. தனது வேண்டுகோளுக்கு இறைவன் செவி சாய்க்காததால், ஒன்றும் புரியாமல் திகைக்கும் தலைவி, இறைவனை அடைய வேண்டும் என்ற தனது ஆர்வம் ஏதும் குன்றாத நிலையில், அருகில் உள்ளவர்களிடம் எவ்வாறு இறைவனைத் சென்று அடைவதை என்பது பற்றி ஆலோசனை கேட்பதை வெளிப்படுத்தும் பாடல் இது. .

பொழிப்புரை

அடியார்களே, தனது அடியார்களுக்கு அவர்கள் வேண்டுவதை அளித்து அவர்களுக்கு மேலான தெய்வமாக விளங்குபவனும், முக்தியை அளிக்கும் வல்லமை படைத்தவனும், முடிவு என்பது இல்லாதவனும், எனக்கு தலைவனும், அழகு நிரம்பிய கழிப்பாலை தலத்தில் உறைபவனும், எனது சிந்தையுள் உறைபவனும் ஆகிய சிவபெருமானைச் சென்று சேர்வதற்கான உபாயம் நீங்கள் தான் எனக்கு அறிவிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.