பாடல் 9
தாரித்து உள்ளி தடமலர் எட்டினால்
பாரித்து ஏத்த வல்லார் வினை பாற்றுவார்
மூரித் தெண்திரை பாய் கெடிலக்கரை
வேரிச் செஞ்சடை வேய்ந்த வீரட்டரே

விளக்கம்

தரித்து என்ற சொல் தாரித்து என்று, எதுகை கருதி விரிந்தது, தரித்து = மனதினில் கொண்டு. தடமலர் = பெரிய மலர்கள். பாரித்து = விரும்பி. உள்ளி = ஆழ் மனதினில் நினைத்து. வேரி = தேன் பொருந்திய. மூரி = பெரிய. பாற்றுவார் = கெடுப்பார். வேய்ந்த = கட்டிய.

பொழிப்புரை

தனது திருவுருவத்தை ஆழ் மனதினில் நினைத்து தியானித்து, நன்றாக அகன்று மலர்ந்த எட்டு வகையான மலர்களால் தன்னை அர்ச்சித்து தன்னை விருப்பமுடன் புகழும் அடியார்களின் வினைகளை, சிவபெருமான் முற்றிலும் கெடுத்து நீக்கிவிடுவார். எனவே மிகுந்த அகலத்துடன் தெளிந்த நீரினைக் கொண்டு பாய்ந்துவரும் கெடில நதிக்கரையில் அமைந்துள்ளவனும், தேன் நிறைந்த மலர்களைத் தனது செஞ்சடையில் சூடியுள்ளவனும் ஆகிய வீரட்டத்துப் பெருமானை, எட்டு மலர்களைக் கொண்டு அவரை வழிபட்டு பயன்பெறுவீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை