ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

16. எட்டு நாண்மலர் கொண்டு - பாடல் 10

எட்டு வகையான மலர்களையும் பூக்களை பறிக்கவேண்டிய முறைப்படி பறித்து, அந்த பூக்களைக் கொண்டு அட்டமூர்த்தியும்,

Updated On :24 பிப்ரவரி 2016, 8:54 am

பாடல் 10

அட்ட புட்பம் அவை கொளுமாறு கொண்டு
அட்ட மூர்த்தி அனாதி தன் பால் அணைந்து
அட்டுமாறு செய்கிற்ப அதிகை வீ
ரட்டனார் அடி சேரும் அவர்களே

விளக்கம்

அட்ட புட்பம் = எட்டு வகையான மலர்கள். கொளுமாறு கொண்டு = பூக்களை பறிக்கும் விதிமுறைகளின்படி. வண்டுகள் தேனைச் சுவைக்கும் முன்னரும், முழுதும் மலராத அரும்புகளை நீக்கியும், முன்னமே மலர்ந்து காய்ந்துபோன மலர்களை அகற்றியும், அன்று மலர்ந்த மலர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த முறை பல தேவாரப் பாடல்களில் அப்பர் பிரானால் சொல்லப்படுகின்றது. பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களில் பெருமானை வழிபட்டு வினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று சொல்லும் அப்பர் பிரான், இந்த பாடலில் அவ்வாறு சொல்லவில்லை. நமது வினைகள் முற்றிலும் கழிந்துவிட்டால், அடுத்த பிறவி என்பது நமக்கு இல்லாமல் நாம் இறைவனின் திருவடிகளைச் சென்று அடைவோம் அல்லவா. அந்த பயனைத்தான் இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பொதுவாக அப்பர் பிரானின் கடைப் பாடல்களில் இராவணனின் கயிலை நிகழ்ச்சி இடம்பெறும். இந்தப் பதிகம் அதற்கு விதிவிலக்கு.

பொழிப்புரை

எட்டு வகையான மலர்களையும் பூக்களை பறிக்கவேண்டிய முறைப்படி பறித்து, அந்த பூக்களைக் கொண்டு அட்டமூர்த்தியும், ஆதியற்றவனாகவும் உள்ள சிவபெருமானது திருவடிகளில் தூவி வழிபடும் அடியார்கள், அதிகை வீரட்டத்தில் உறையும் பெருமானின் திருவடிகளில் சென்று சேர்வார்கள். எனவே எட்டு மலர்களைக் கொண்டு அவரை வழிபட்டு பயன்பெறுவீர்களாக.

முடிவுரை

மலர்கள் தூவி சிவபெருமானை வழிபட்டால் ஏற்படும் பலன்கள் இந்த பதிகத்தில் கூறப்படுகின்றன. அப்பர் பிரான் காட்டிய வழியில் நாமும் சென்று, எட்டு வகையான மலர்களைத் தூவி பெருமானை வழிபட்டு, நமது வினைகளைத் தீர்த்துக்கொண்டு, நம்மைப் பிணைத்திருக்கும் பிறப்பிறப்புச் சங்கிலியை அவனருளால் அறுத்துக்கொண்டு, அவனது சேவடியைச் சென்று சேர்ந்து, முடிவில்லாத ஆனந்தத்தில் திளைப்போமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.