(ஆமாத்தூர் - குறுந்தொகை)
முன்னுரை
திருவதிகைப் பதியில் பல நாட்கள் தங்கியிருந்து, திருக்கோயிலில் உழவாரப் பணிகள் செய்தும், இறைவனைக் குறித்து பல பதிகங்கள் பாடியும் மகிழ்ந்திருந்த அப்பர் பிரான், அங்கிருந்து புறப்பட்டு திருவெண்ணெய்நல்லூர், ஆமாத்தூர், திருக்கோவல் வீரட்டம் (தற்போதைய பெயர் திருக்கோயிலூர்) ஆகிய தலங்கள் சென்று பதிகங்கள் பாடிய பின்னர் பெண்ணாடகம் சென்றதாகப் பெரிய புராணத் தகவல்கள் கூறுகின்றன. ஆமாத்தூர் தலம், விழுப்புரத்துக்கு மிகவும் அருகில் உள்ள தலம், திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில், வலது பக்கம் செல்லும் ஒரு பாதையில் உள்ள தலம். இந்த தலத்தின் மீது மூவரும் பதிகங்கள் அருளியுள்ளனர். அப்பர் பிரான் இந்த தலத்தின் மீது இரண்டு பதிகங்கள் அருளியுள்ளார். அப்பர் பெருமான் திருவெண்ணெய்நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகங்கள் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை. மருங்கு = அருகில்; அருகில் உள்ள மற்ற திருப்பதிகள் என்று சேக்கிழார் குறிப்பிடும் தலங்கள் எவை என்று விளங்கவில்லை.
திருவதிகைப் பதி மருங்கு திருவெண்ணெய் நல்லூரும்
அருளு திருவாமாத்தூர் திருக்கோவலூர் முதலா
மருவு திருப்பதி பிறவும் வணங்கி வளத் தமிழ் பாடிப்
பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகடம் அடைந்தார்
பாடல் 1
மாமாத்தாகிய மால் அயன் மால் கொடு
தாமாத் தேடியும் காண்கிலர் தாள் முடி
ஆமாத்தூர் அரனே அருளாய் என்று என்று
ஏமாப்பு எய்திக் கண்டார் இறையானையே

விளக்கம்

மாத்து = அறியாமை. மா = பெரிய. தாமா = தங்களது முயற்சியால் அறிவேன் என்ற ஆணவத்தால். ஏமாப்பு = மகிழ்ச்சி, களிப்பு. அறியாமையில் மூழ்கிக் கிடந்த திருமாலும் பிரமனும் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இவ்வாறு அவர்கள் இருவரும் அறியாமையில் மூழ்கி, தங்களுக்குள்ளே யார் பெரியவன் என்று வாக்குவாதம் செய்ததை மணிவாசகர் தோள்நோக்கம் பதிகப் பாடல் ஒன்றில் குறிப்பிடுகின்றார்.

ஒருமுறை திருமாலுக்கும் பிரமனுக்கும் இடையே, அவர்களுக்கு இருந்த அறியாமை காரணமாக தங்களுக்குள் யார் பெரியவன் என்ற சொற்போர் நடைபெற்றது. அப்போது அவர்கள் எதிரே பெரிய அனற்பிழம்பு ஒன்று தோன்றியது. விண்ணை முட்டும் அளவுக்கு எழுந்து நின்ற தீப்பிழம்பு, பாதாளத்தையும் ஊடுருவி நின்றது. இந்தத் தழற்பிழம்பின் அடியையும் முடியையும் காண்பவரே தங்களில் உயர்ந்தவர் என்று முடிவுக்கு வந்த பிரமனும், திருமாலும் அடிமுடி தேடிச் சென்று, தங்கள் முயற்சியில் வெற்றி காண முடியாமல் திகைத்தனர். இந்த கருத்து மணிவாசகரால், தோள்நோக்கம் பதிகத்தின் ஒரு பாடலில் கூறப்படுகின்றது. சிவபெருமான் தான் பரம்பொருள் என்பதை உணராமல், தாங்கள் பரம் என்று அவர்கள் ஒருவருக்கொருவர் வாதம் செய்ததாக மணிவாசகர் இங்கே குறிப்பிடுகின்றார்.

பிரமன் அரி என்று இருவரும் தம் பேதமையால்
பரமம் யாம் பரமம் என்று அவர்கள் பதைப்பு ஒடுங்க
அரனார் அழல் உருவாய் அங்கே அளவு இறந்து
பரம் ஆகி நின்றவா தோள்நோக்கம் ஆடாமோ

இந்த நிகழ்ச்சி பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது. தங்களுக்குள்ளே யார் மேம்பட்டவர் என்று வாதம் செய்துகொண்டிருந்த பிரமன் மற்றும் திருமாலின் முன்னே எழுந்த தீப்பிழம்பினைக் கண்டு, அந்த தீப் பிழம்பின் இரண்டு புறத்திலும் நின்ற பிரமனும் திருமாலும் இறைவனைப் பணிந்த செய்தி, சொல்லப்படும் அப்பர் பிரானின் பாடல் (4.14.2) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பரம் ஒரு தெய்வம் = தங்களுக்கு அப்பாற்பட்ட பரமாகிய ஒரு தெய்வம். தம்பம் = தூண்

நிரவொலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அதுவப்
பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணியப்
பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன்
பர முதலாய தேவர் சிவனாய மூர்த்தி அவனா நமக்கொர் சரணே

பொழிப்புரை

தங்களது திறமையில் மிகுந்த பெருமை உடையவர்களாக இருந்த திருமாலும் பிரமனும், தங்களது திறமை மீது அவர்கள் கொண்டிருந்த ஆணவ மயக்கத்தினால், தங்களின் முன்னே எழுந்த சோதியின் அடியையும் முடியையும் தாங்களேத் தேடிக் காணலாம் என்று அவர்கள் ஈடுபட்ட முயற்சி தோல்வி அடைந்தபோது, ஆமாத்தூர் அரனே எங்களுக்கு அருள் புரிவாயாக என்று பல முறை அவர்கள் கதறியபோது, பெருமான் அவர்கள் முன்னரே இலிங்க வடிவில் தோன்றி தனது அடியையும் முடியையும் அவர்களுக்கு காட்டி அருளினார். இறைவனின் அருளால் அவனது அடியையும் முடியையும் கண்ட அவர்கள் மிகுந்த களிப்பு எய்தினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!

அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை