பாடல் 4
பஞ்ச பூத வலையில் படுவதற்கு
அஞ்சி நானும் ஆமாத்தூர் அடிகளை
நெஞ்சினால் நினைந்தேன் நினைவு எய்தலும்
வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே

விளக்கம்

நினைவு எய்தல் = நினைத்தல். வற்றுதல் = நீங்குதல். வஞ்ச ஆறுகள் = வஞ்சனை செய்து உயிரைத் தனது வசப்படுத்தும் புலன்கள் ஏற்படுத்தும் வழிகள். பஞ்ச பூத வலை என்று நமது உடலை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பஞ்ச பூதங்களின் கலவையே நமது உடலாகும். உடலில் உள்ள பல உறுப்புகள் மற்றும் பல செய்கைகள் பஞ்ச பூதங்களின் கூறுகளாக விளங்குகின்றன. எலும்பு, தசை, உரோமம், தோல் மற்றும் நரம்புகள் நிலத்தின் உட்கூறுகள். ரத்தம், சிறுநீர், வியர்வை, உமிழ்நீர் மற்றும் சுக்கிலம் நீரின் உட்கூறுகள். இதயத்தில் ஏற்படும் வெப்பம், உடலில் பொதுவாக உள்ள வெப்பம், கண்களில் உள்ள வெப்பம், பசியினை உண்டாக்கும் உணர்வு மற்றும் மண்டைக் கொதிப்பு ஆகியவை நெருப்பின் அம்சமாக உடலில் ஏற்படுகின்றன. ஆகாயத்தின் பிரிவுகளாக பத்து நாடிகளும் (அத்தி, அலம்புடை, இடைகலை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, குகுதை, சங்கினி, சிகுவை, புருடன்) காற்றின் பிரிவுகளாக பத்து வாயுக்களும் (பிராணன், வியானன், அபானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன்) உடலில் உள்ளன. நெருப்பின் தன்மையால், உடலில் தூக்கம், அச்சம், சேர்க்கை, சோம்பல், பசி ஆகியவை உண்டாகின்றன என்றும், காற்றின் தன்மையால் ஓடுதல், நடத்தல், நிற்றல், உட்காருதல், படுத்தல் ஆகிய செய்கைகள் நடைபெறுகின்றன என்றும் ஆகாயத்தின் தன்மையால், காமம், குரோதம். உலோபம், மோகம், மதம் ஆகிய குனனகள் ஏற்படுகின்றன என்றும் கூறுவார்கள். எனவே பஞ்ச பூதங்கள் எவ்வாறு நமது உடலினை பல விதமான செய்கைகளில் ஆழ்த்துகின்றன என்பதை அறியும் நாம், பஞ்சபூத வலையினில் நாம் சிக்கியுள்ளதை உணரலாம்.

பொழிப்புரை

பஞ்ச பூதங்களும் எனது உடலில் ஏற்படுத்தும் பல விதமான செயல்களால் எனது மனதில் தோன்றும் இறையுணர்வு குறையும் என்ற அச்சம் எனக்கு உள்ளது. எனவே, இறைவன் தான் என்னை பஞ்ச பூதங்களின் வலையில் விழாமல் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்துடன் ஆமாத்தூர் அழகனை நான் மனதினில் நினைத்தேன். நான் இறைவனை நினைத்தவுடனே, அவனது அருளால், என்னை வஞ்ச வழியினில் புலன்கள் அழைத்துச் செல்லும் வழிகள் மறைந்துவிட்டன. இவ்வாறு பஞ்ச பூதங்களின் வலையிலிருந்து நான் தப்பியதை நீங்கள் அனைவரும் கண்டு, நீங்களும் இறைவனை நினைத்து அத்தகைய பயனை அடைவீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை