ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

17. மாமாத்தாகிய மாலயன் - பாடல் 5

நறுமணம் கமழும் குரா மலர்கள் பொருந்திய கூந்தலை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமான்,

Updated On :4 மார்ச் 2016, 6:45 am

பாடல் 5

குரா மன்னும் குழலாள் ஒரு கூறனார்
அரா மன்னும் சடையான் திரு ஆமாத்தூர்
இராமனும் வழிபாடு செய் ஈசனை
நிராமயன் தனை நாளும் நினைமினே

விளக்கம்

இந்த தலத்தின் அருகே உள்ள வட்டப்பாறை என்ற இடத்தில் தான் இராமனும் சுக்ரீவனும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதாக உறுதி பூண்டனர் என்று நம்பப்படுகின்றது. இந்த திருக்கோயில் தலபுராணம், இராமபிரான் சிவபெருமானை வணங்கியதாக கூறுகின்றது, அந்த தகவல் தான் அப்பர் பிரானால் இந்த பாடலில் கொடுக்கப்பட்டுள்ளது, அரா = பாம்பு. நிராமயன் = நோய் அற்றவன்.

பொழிப்புரை

நறுமணம் கமழும் குரா மலர்கள் பொருந்திய கூந்தலை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமான், பாம்பு நிலையாக இடம் பெரும் சடையினை உடையவன்: அவன், திருவாமாத்தூர் தலத்தில் இராமபிரானால் வணங்கப் பெற்றவன்; இயற்கையாகவே, பிறப்பு இறப்பினைக் கடந்தவன் என்பதால், பிறவிப் பிணி என்ற நோய் அற்றவனாக காணப்படும் இறைவனை, தினமும் நினைத்து வழிபாடு செய்வீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.