பாடல் 9
குண்டர் பீலிகள் கொள்ளும் குணமிலா
மிண்டரோடு எனை வேறு படுத்து உய்ய
கொண்ட நாதன் குளிர் புனல் வீரட்டத்து
அண்டனார் இடம் ஆமாத்தூர் காண்மினே

விளக்கம்

அண்டனார் = உலக முதல்வன். மிண்டர் = வம்பு செய்பவர், வெறும் உடல் பலத்தினை மட்டும் உடைய குண்டர்கள். எவராலும் தீர்க்கமுடியாத சூலை நோயினைக் கொடுத்து, தான் சமணர்களை விட்டு பிரிவதற்கு வழி வகுத்த இறைவன் என்றும், அடைக்கலமாக வந்த தான் உய்வதற்கும் வழி வகுத்த இறைவன் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை

குண்டர்களும், மயிற்பீலிகளை எப்போதும் வைத்திருப்பவர்களும், நற்குணங்கள் ஏதும் இல்லாதவர்களும், தங்களது அறிவினை வளர்த்துக் கொள்ளாமல் உடலை வளர்த்தவர்களும் ஆகிய சமணர்களுடன் பழகி வந்த அடியேனை, அவர்களிடமிருந்து பிரித்து, பின்னர் ஆட்கொண்டு, அடியேன் உய்வதற்கு வழி வகுத்துக் கொடுத்தவன், குளிர்ந்த தண்ணீரினை உடைய கெடில நதியினால் சூழப்பட்ட வீரட்டத்து இறைவன் ஆவார். அவர்தான் உலகத்தின் நாயகன். அவர் உறையும் இடமாகிய ஆமாத்தூரைச் சென்று காண்பீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!

அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை