ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

18. வண்ணங்கள் தாம் பாடி - பாடல் 4

சிவபிரானின் இரண்டு கண்களும் சூரிய சந்திரர்கள் என்று சொல்லப்படும். ஒருமுறை

Updated On :18 மார்ச் 2016, 9:02 am

பாடல் 4

பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் படநாகக் கச்சையர்
பிச்சைக்கு என்று அங்கு
இசைந்ததோர் இயல்பினர் எரியின் மேனி இமையா
முக்கண்ணினர் நால்வேதத்தர்
பிசைந்த திருநீற்றினர் பெண்ணோர் பாகம் பிரிவறியா
பிஞ்ஞகனார் தெண்ணீர்க் கங்கை
அசைந்த திருமுடியர் அங்கைத் தீயர் அழகியரே ஆமாத்தூர்
ஐயனாரே

விளக்கம்

பசைந்த = விருப்பம் உடைய. பிசைந்த = வடிவமைத்த.

இமையா முக்கண்ணினர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நெற்றியில் இருக்கும் கண் எப்போதும் மூடியே இருக்கும்; மற்ற இரண்டு கண்கள் எப்போதும் திறந்தே காணப்படும். இமையாத கண்கள் இமைத்து நிலை மாறியபோது விபரீதங்கள் ஏற்பட்டதை நாம் புராணங்களிலிருந்து அறிகின்றோம். எப்போதும் மூடியிருக்கும் நெற்றிக் கண் திறந்ததால், மன்மதன் உடல் எரிந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

சிவபிரானின் இரண்டு கண்களும் சூரிய சந்திரர்கள் என்று சொல்லப்படும். ஒருமுறை விளையாட்டாக, பார்வதி தேவி, சிவபிரானின் கண்களை மூட, அனைத்து உலகங்களும் இருளில் மூழ்கின, உலகில் மொத்த இயக்கமும் நின்றுபோனது. தனது தவற்றினை உணர்ந்த பார்வதி தேவி, உடனே சிவபிரானின் கண்களை மறைத்த தனது கைகளை எடுத்துவிட்டார். பார்வதி தேவி தனது கண்களை மறைத்திருந்த கணப்பொழுதில் ஏற்பட்ட உலகத்தின் இருளைப் போக்குவதற்காக தனது நெற்றிக் கண்ணை, சிவபிரான் திறந்ததாக அப்பர் பிரான் கூறுகின்றார். தனது தவறினுக்கு வருந்திய பார்வதி தேவி, திருப்பாம்புரம் தலத்திற்கு வந்து, அங்கே தவம் செய்து ஒரு சிவராத்திரி நாள் அன்று, இறைவனின் தரிசனம் கிடைக்கப்பெற்றார். இந்த தகவல் அப்பர் பிரானால், தசபுராணப் பதிகத்தில் கூறப்படுகிறது. நலம் = சிவம். நலம் மலி மங்கை = நலத்தை அருளும் சிவனின் மனைவி உமையம்மை. அலர்தரல் = விரிதல். அலர்வித்த = ஒளிவிடச் செய்த. (பாடல் எண் 4.14.8).

நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயனத் தலங்கள் கரமா
உலகினை ஏழு முற்றும் இருள் மூட மூட இருள் ஓட நெற்றி ஒரு கண்
அலர் தர வஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச மதி போல்
அலர் தரு சோதி போல் அலர்வித்த முக்கணன் அவனா நமக்கோர் சரணே.

பொழிப்புரை

பாடுதலையும் கூத்தாடுவதையும் விரும்பும் பல பூதங்களை உடைய ஆமாத்தூர் ஐயனார், படம் எடுக்கும் பாம்பினை, தனது இடுப்பில் கச்சையாக உடுத்தியுள்ளார்; அவர் விருப்பத்துடன் பிச்சை ஏற்கும் தன்மையாளர்; தீப்போன்ற சிவந்த மேனியராய், இமைக்காத மூன்று கண்களை உடையவராய், நான்கு வேதங்களையும் ஓதும் அவர், திருநீற்றினை நீரில் குழைத்து உடல் முழுதும் பூசிக்கொண்டவர்; உமையம்மையை தனது உடலில் ஒரு பாகமாகக் கொண்டு, எப்போதும் பிரியாமல் இருப்பவர், அழகாக பின்னப்பட்ட சடைமுடியைக் கொண்ட அவர், கங்கை நதி அசைந்து ஆடும்விதமாகத் தனது தலையில் ஏற்றுக் கொண்டுள்ளார்; அந்த ஆமாத்தூர் தலைவர் தீ ஏந்திய கையினராய், அழகியராக காணப்படுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.