பாடல் 7
கையோர் கபாலத்தர் மானின் தோலர் கருத்து உடையர் நிருத்தராய்
காண்பார் முன்னே
செய்ய திருமேனி வெண்ணீறாடித் திகழ் புன்சடை முடி மேல்
திங்கள் சூடி
மெய்யொரு பாகத்து உமையை வைத்து மேவார்
திரிபுரங்கள் வேவச் செய்து
ஐயனார் போகின்றார் வந்து காணீர் அழகியரே
ஆமாத்தூர் ஐயனாரே

விளக்கம்

கபாலம் = பலி பாத்திரம். கருத்துடையர் = பிச்சை ஏற்றல் அல்லாது வேறு ஒரு கருத்து உடையவர். தனது இல்லத்திற்கு வந்து பிச்சை ஏற்ற பெருமான், தனது காதலை பொருட்படுத்தாதுச் சென்றதால் வருத்தமடைந்த, இந்த பாடலின் நாயகி, தாருகாவனத்திற்கு பலி ஏற்கச் சென்ற பெருமானின் நோக்கத்தை நினைத்துப் பார்க்கின்றாள். தாருகாவனத்து முனிவர்கள், தாங்கள் செய்யும் சடங்குகளில் நம்பிக்கை வைத்தவர்களாய், சிவபெருமானை வழிபடுவதை தவிர்த்தனர். அவர்களுக்கு, அவர்களது மனைவியர்களின் கற்பு நிலை பெரிய அரணாக காத்து நின்றது. இந்த சூழ்நிலையில், பிக்ஷாடனர் வேடம் தாங்கி, மோகினி வேடம் தாங்கிய திருமாலுடன், சிவபிரான் தாருகாவனம் செல்கின்றார். அவரது அழகால் கவரப்பட்ட, முனிவர்களின் மனைவியர்கள், தங்களது நிலையை மறந்து, சிவபிரானைப் பின்தொடர்ந்து செல்லலானார்கள். தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையினை விட்டுவிட்டு, தங்களது ஆடைகள் நழுவதையும் உணராமல் சிவபிரானின் பின்னர் அவர்கள் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. வேலூர் அருகே உள்ள விரிஞ்சிபுரம் கோயிலில் உள்ள பிக்ஷாடனர் சிற்பம் இந்த காட்சியை தத்ரூபமாக சித்தரிக்கின்றது. சிவபெருமான் தாருகாவனம் சென்று பிச்சை ஏற்றது தான் உண்பதற்காக அல்ல, என்பதை தெளிவு படுத்தும் அப்பர் பிரானின் பாடல் (4.62.5) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது சிவபெருமான் உண்டது பிச்சை ஏற்ற உணவினை அல்ல, பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சு தான் என்று நகைச்சுவை பாட அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். பளகன் = குற்றமுடையவன், மூடன். தான் தனது கடந்த காலத்தில். சிவபிரானை நினையாமல் இருந்ததற்காக, தன்னை மூடன் என்றும் குற்றமுடையவன் என்றும் அப்பர் பிரான் கூறிக்கொள்கின்றார்.

வெண்தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும்
உண்டதும் இல்லை சொல்லில் உண்டதும் நஞ்சு தன்னைப்
பண்டு உன்னை நினைய மாட்டாப் பளகனேன் உளமது ஆர
அண்டனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே

பொழிப்புரை

கையில் கபாலம் ஏந்தி, மானின் தோலை உடுத்தி, பிச்சை ஏற்பது அல்லாமல், வேறு நோக்கத்துடன் செயல்படுபவராக, தன்னைக் காண்பவர் முன்னே நடனம் ஆடிக்கொண்டு, தனது திருமேனியில் வெண்ணீறு பூசி, ஒளி வீசும் சடையில் சந்திரனைச் சூடிக்கொண்டு, உடலின் ஒரு பாகத்தில் உமையம்மையை வைத்துக் கொண்டிருக்கும் பெருமானார், திரிபுரத்து மூன்று கோட்டைகளையும் தீயில் வெந்து போகுமாறு எரித்தவர். இத்தகைய கோலத்தோடு ஆமாத்தூர் அழகியர் இங்கே வந்து சென்றுகொண்டிருக்கின்றார், நீங்கள் அனைவரும் காணுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை