பாடல் 8
ஒன்றாலும் குறைவில்லை ஊர்தி வெள்ளேறு ஒற்றியூர் உம்
ஊரே உணரக் கூறீர்
நின்று தான் என் செய்வீர் போவீராகில் நெற்றி மேல் கண்
காட்டி நிறையும் கொண்டீர்
என்றும் தான் இவ்வகையே இடர் செய்கின்றீர் இருக்கும்
ஊர் இனி அறிந்தோம் ஏகம்போ
அன்றித் தான் போகின்றீர் அடிகள் எம்மோடு அழகியரே
ஆமாத்தூர் ஐயனாரே

விளக்கம்

நிறை = அடக்க குணம். ஒற்றியூர் = அடமானம் வைக்கப்பட்ட ஊர்.

ஒன்றாலும் குறைவில்லை என்ற தொடர் மூலம் சிவபிரான் குறையேதும் இல்லாதவர் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தேர், குதிரை, யானை போன்ற வாகனங்கள் இல்லை என்ற குறையோ (வாகனம், எருது), உயர்ந்த பட்டாடைகள் இல்லை என்ற குறையோ (உடை, கோவணம் மற்றும் தோலாடை), பொன்னாபரணம் இல்லை என்ற குறையோ (அணிகலன்கள், நாகம் மற்றும் எலும்பு மாலை), உயர்ந்த மாலைகள் இல்லை என்றார் குறையோ (எலும்பு மாலை அல்லது தலைமாலை), வாசனை தரும் பொடிகள் பூசவில்லை என்ற குறையோ (மேனியில் பூசுவது திருநீறு), தமது தலமாகிய ஒற்றியூர், அடமானம் வைக்கப்பட்டு உள்ளது என்ற குறையோ இல்லாமால் இருப்பவர் சிவபெருமான் என்று உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை

தனக்கு காளை தான் வாகனம் என்ற குறையோ, அல்லது தமது ஊர் அடமானம் வைக்கப்பட்டுள்ளது என்ற குறையோ இல்லாத நீர், உமது ஊர் ஒற்றியூர், அடமானம் வைக்கப்பட்டது ஏன் என்பதை எமக்கு உணர்த்தாமல் இருக்கின்றீர்; எனது இல்லத்தில் இருக்கும் போது ஒன்றும் செய்யாமல் நிற்கின்றீர்; ஆனால் போகும்போது உனது நெற்றியில் உள்ள கண்ணினைக் காட்டி, எமது அடக்க குணத்தை கைப்பற்றி நான் உம்மை காதல் செய்யுமாறு செய்கின்றீர்; நீர் எப்போதும் இவ்வகையில் எங்களுக்கு துன்பம் இழைக்கின்றீர்; உமது ஊர் யாது என்பதை நாம் அறிந்துகொண்டோம்; என்னை உடன் அழைத்துச் செல்லாமல் நீர் இப்போது செல்லும் இடம் ஏகம்போ (காஞ்சி நகரத்தில் உள்ள ஏகம்பரநாதர் கோயில், ஏகம்பம் என்று தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்படுகின்றது). ஆமாத்தூர் தலைவராகிய நீர் அழகியரே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை