ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

18. வண்ணங்கள் தாம் பாடி - பாடல் 9

விரைந்து செல்லும். கல்லலகு = கற்கப்படும் மாத்திரை அளவு; இசைக் கலைஞர்கள், தாளத்தைக் கொண்டு பின்பற்றும் நேர அளவு; எனவே, தாளத்தைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். ஒரு வகை ஆயுதம் என்றும் கருதுகின்றனர்.

Updated On :18 மார்ச் 2016, 9:22 am

பாடல் 9

கல்லலகு தாம் கொண்டு காளத்தியார் கடிய விடையேறிக்
காணக் காண
இல்லமே தாம் புகுதா இடுமின் பிச்சை என்றாருக்கு எதிர் எழுந்தேன்
எங்கும் காணேன்
சொல்லாதே போகின்றீர் உம் ஊர் ஏது துருத்தி பழனமோ
நெய்த்தானமோ
அல்லலே செய்து அடிகள் போகின்றார் தாம் அழகியரே
ஆமாத்தூர் ஐயனாரே

விளக்கம்

கடிய = விரைந்து செல்லும். கல்லலகு = கற்கப்படும் மாத்திரை அளவு; இசைக் கலைஞர்கள், தாளத்தைக் கொண்டு பின்பற்றும் நேர அளவு; எனவே, தாளத்தைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். ஒரு வகை ஆயுதம் என்றும் கருதுகின்றனர்.

பொழிப்புரை

கல்லலகு எனப்படும் தாளத்தினைக் கையில் ஏந்திய, காளத்தியார், விரைந்து செல்லும் காளை வாகனத்தின் மீதேறி, எல்லோரும் காணும் வண்ணம் எனது இல்லத்தில் புகுந்து, பிச்சை இடுமாறு கோரினார். அவ்வாறு வந்தவருக்கு இடுவதற்காக பிச்சை கொண்டுவந்தபோது, அவரை வீட்டினுள் எங்கும் காணாமல், திகைத்த நான் அவரைத் தேடினேன். பின்னர் அவரைக் கண்டபோது, ஒன்றும் சொல்லாமல், பிச்சை ஏற்காமல் வீட்டை விட்டு செல்கின்றீரே, உமது ஊர் என்ன, பழனமா, அல்லது துருத்தியா அல்லது நெய்த்தானமா என்று வினவிய எனக்கு பதில் ஏதும் கூறாமல், என்னை வருத்தத்தில் ஆழ்த்திச் சென்ற, ஆமாத்தூர்த் தலைவர் மிகவும் அழகியரே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.