பாடல் 7:
படரொளி சடையின் உள்ளால் பாய்புனல் அரவினோடு
சுடரொளி மதியம் வைத்துத் தூவொளி தோன்றும் எந்தை
அடரொளி விடை ஒன்று ஏற வல்லவர் அன்பர் தங்கள்
இடரவை கெடவும் நின்றார் இடைமருது இடம் கொண்டாரே
விளக்கம்:
படரொளி=ஒளிபடர்ந்து மின்னும் சடை; பொன்னிறமாக ஒளிவீசும் சடையை உடைய பெருமானின் மேனியும் சுடர் விட்டு ஒளி வீசுகின்றது என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். அடரொளி விடை=அடர்த்த வெண்மை நிறம் கொண்டு ஒளிவீசும் இடபம்;
பொழிப்புரை:
பொன்னிற ஒளி படர்ந்து வீசும் சடையின் உள்ளே, பாய்ந்து மிகுந்த வேகத்தோடு வந்த கங்கை நதியை வைத்த பெருமான், அதே சடையினில் பாம்பினையும் ஒளிவீசும் சந்திரனையும் வைத்துள்ளார். தூய ஒளியாக பிரகாசிக்கும் எனது தந்தையாகிய பெருமான், அடர்ந்த வெண்மை நிறத்துடன் ஒளி வீசும் இடபத்தினைத் தனது வாகனமாக ஏற்றுள்ளார். அடியார்களின் துன்பங்களைத் போக்க வல்ல பெருமான் இடைமருது நகரத்தினைத் தான் இருக்கும் இடமாகக் கொண்டவர் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியை வீழ்த்திய தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின்

திமுக இருக்கும் வரை காவிக்கொடி பறக்காது: முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுக்கும் கட்டாய பயிற்சி!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

