ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

71. காடுடைச் சுடலை நீற்றர் - பாடல் 7

மின்னும் சடை

Updated On :2 ஜனவரி 2018, 6:03 am

பாடல் 7:
    
படரொளி சடையின் உள்ளால் பாய்புனல் அரவினோடு
    சுடரொளி மதியம் வைத்துத் தூவொளி தோன்றும் எந்தை
    அடரொளி விடை ஒன்று ஏற வல்லவர் அன்பர் தங்கள்
    இடரவை கெடவும் நின்றார் இடைமருது இடம் கொண்டாரே

விளக்கம்:
படரொளி=ஒளிபடர்ந்து மின்னும் சடை; பொன்னிறமாக ஒளிவீசும் சடையை உடைய பெருமானின் மேனியும் சுடர் விட்டு ஒளி வீசுகின்றது என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். அடரொளி விடை=அடர்த்த வெண்மை நிறம் கொண்டு ஒளிவீசும் இடபம்; 

பொழிப்புரை:
பொன்னிற ஒளி படர்ந்து வீசும் சடையின் உள்ளே, பாய்ந்து மிகுந்த வேகத்தோடு வந்த கங்கை நதியை வைத்த பெருமான், அதே சடையினில் பாம்பினையும் ஒளிவீசும் சந்திரனையும் வைத்துள்ளார். தூய ஒளியாக பிரகாசிக்கும் எனது தந்தையாகிய பெருமான், அடர்ந்த வெண்மை நிறத்துடன் ஒளி வீசும் இடபத்தினைத் தனது வாகனமாக ஏற்றுள்ளார். அடியார்களின் துன்பங்களைத் போக்க வல்ல பெருமான்  இடைமருது நகரத்தினைத் தான் இருக்கும் இடமாகக் கொண்டவர் ஆவார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.