முன்னுரை:
வேதங்கள் மொத்தத்தில் நான்கு என்றாலும், அதர்வண வேதம் மந்திரங்கள், மருத்துவம் பற்றி அதிகமாக கூறுவதால், அதனை விட்டுவிட்டு மூன்று வேதங்கள் என்று கூறுவதுண்டு. இந்த மூன்று வேதங்களின் தொகுப்பினை வேதத்ரயீ என்றும் சொல்வார்கள். இன்றும் வடநாட்டில் சதுர்வேதி, திரிவேதி என்ற பெயர்கள் பழக்கத்தில் உள்ளன. இந்த மூன்று வேதங்களில் நடுவாக கருதப்படுவது யஜூர் வேதமாகும். யஜூர் வேதத்தில் ஏழு காண்டங்கள் உள்ளன. நடுவாக உள்ள நான்காவது காண்டத்தில் பதினோரு அனுவாகங்கள் உள்ளன. பதினோரு அனுவாகங்களில் நடுவாக கருதப்படுகின்ற ஆறாவது அனுவாகத்தில் ஸ்ரீ ருத்ரம் உள்ளது. பதினோரு சூக்தங்கள் கொண்டுள்ள ஸ்ரீ ருத்ரத்தின் ஆறாவது சூக்தத்தின் நடுப் பகுதியில் பஞ்சாட்சர மந்திரம் வருகின்றது. இவ்வாறாக வேதத்தின் நடுவில் பஞ்சாட்சர மந்திரம் வருகின்றது என்று நாம் கருதலாம். திருமூலரும் வேதத்தின் நடுவில் உள்ள மந்திரம் பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுகின்றார்.
காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பதும் ஆவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூலம் நடுவுற முத்தி தந்தானே
நான்கு வேதங்களின் உட்பொருளாக, உண்மைப் பொருளாக உள்ளது நமச்சிவாய மந்திரம் என்று ஞானசம்பந்தர் நமச்சிவாயப் பதிகத்தின் முதல் பாடலில் (3.49.1) கூறுகின்றார்.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பன
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
தேவார ஆசிரியர்கள் மூவரில் நடுவில் வைக்கப்பட்டு போற்றப் படுபவர் அப்பர் பிரான்.. அவர் அருளிய திருமுறைகளில் நடுவில் வருவது ஐந்தாம் திருமுறை. நூறு பதிகங்கள் கொண்ட இந்த திருமுறையின் நடுவில் உள்ள பதிகம் என்று ஐம்பது மற்றும் ஐம்பதொன்றாவது பதிகங்களை கருதலாம். ஐம்பத்தொன்றாம் பதிகத்தின் பதினோரு பாடல்களில் நடுவாக அமைந்துள்ளது ஆறாவது பாடல். இந்த பாடலின் நடுவே சிவாய என்று பஞ்சாக்ஷர மந்திரம் வருகின்றது. வடமொழி வேதங்களைப் போன்று, தமிழ் வேதங்களாக கருதப்படும் தேவாரத்தின் நடுவிலும் ஐந்தெழுத்து மந்திரம் வருவதை நாம் உணரவேண்டியது அவசியம். இந்த பதிகம் தான் இங்கே விளக்கப்படுகின்றது பல தேவாரப் பாடல்களில் நமச்சிவாய என்றும் சிவாயநம என்றும் ஐந்தெழுத்து மந்திரம் வந்தாலும், தேவாரப் பதிகங்களின் நடுவே வரும் இந்த பதிகம், தனது நடுவில் பஞ்சாட்சர மந்திரத்தை அடக்கியதாக உள்ளதால், இந்த பதிகம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இந்த நமச்சிவாய மந்திரத்தின் சிறப்பு கருதியே மூவர் பெருமானார்கள் நமச்சிவாயப் பதிகங்களை அருளியுள்ளார்கள். மேலும் மணிவாசகப் பெருமானும் தனது திருவாசகத்தை நமச்சிவாய என்ற மந்திரத்தை முதற் சொல்லாக வைத்து ஆரம்பிக்கின்றார். (நமச்சிவாய வாழ்க நாதன் தான் வாழ்க). மூவர் பெருமானார்கள் அருளிய நமச்சிவாயப் பதிகங்களின் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று பதிகங்களின் அனைத்துப் பாடல்களும் நமச்சிவாய என்ற சொல்லினைக் கொண்டுள்ளன. ஞானசம்பந்தர் அருளிய துஞ்சலும் துஞ்சலில்லாத என்று தொடங்கும் பதிகம் (3.22) அஞ்செழுத்துப் பதிகம் என்று அழைக்கப்படுகின்றது.
அருளியவர் தொடக்கச் சொல் பதிக எண்
ஞான சம்பந்தர் காதலாகி கசிந்து 3.49
அப்பர் பிரான் சொற்றுணை வேதியன் 4.11
சுந்தரர் மற்றுப் பற்று எனக்கு 7.48
பாடல் 1:
நீலமாமணி கண்டத்தர் நீள் சடைக்
கோல மாமதி கங்கையும் கூட்டினார்
சூல மான் மழு ஏந்திச் சுடர்முடிப்
பால் நெய் ஆடுவார் பாலைத் துறையரே
விளக்கம்:
கோல மாமதி=அழகில் சிறந்த சந்திரன்: நீல மாமணி=கழுத்தில் பெரிய நீல மணி கட்டியது போன்று, நீலநிறம் கொண்டவர்:
பொழிப்புரை:
ஆலகால விடத்தை உண்டதால், கழுத்தினில் பெரிய நீள் மணி போன்று கறையினை உடையவர் சிவபெருமான். அவர் தனது நீண்ட சடையில், அழகிய பிறைச் சந்திரனையும் கங்கையையும் சேர்த்து வைத்தவர்: அவர் தனது கையினில் சூலம் மழு ஆகிய ஆயுதங்களுடன், இளம் மான் கன்றினையும் ஏந்தியவர்: அவர் ஒளி வீசும் தனது தலையினை பால் நெய் முதலான ஐந்து பொருட்களையும் கொண்டு நீராடுபவர். இத்தகைய தன்மைகளை உடைய சிவபெருமான் பாலைத்துறை என்ற தலத்தில் உறைகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெடிகுண்டு தாக்குதலில் 2 சிறாா்கள் உயிரிழப்பு: மணிப்பூா் முதல்வா் வீட்டை நோக்கி பேரணி சென்ற போராட்டக்காரா்கள் மீது தடியடி- கண்ணீா்ப் புகை குண்டு வீச்சு

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


