செப்டம்பர்
15\09: ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்காக சிரியா, பாலஸ்தீனம், எகிப்து நாடுகளைச் சேர்ந்த 500 அகதிகள் சென்ற படகு, மால்டா கடல் பகுதியில் மூழ்கியதில் அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.

29\09: ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அஷ்ரஃப் கனி பதவியேற்றார்.
அக்டோபர்
410: உலகிலேயே முதல் முறையாக "கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை' செய்து கொண்ட பிறகு, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 34 வயதுப் பெண், குழந்தையைப் பெற்றெடுத்தார்.

1310: இலங்கையில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாணம்-கொழும்பு இடையே ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. அதிபர் ராஜபட்ச கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
1510: நேபாளத்தின் மேற்குப் பகுதியில் பனிப்புயலில் சிக்கி இந்தியர் ஒருவர் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். 85 பேர் மாயமானார்கள். மேலும், தோரங் கணவாய் பகுதியில் 16 பேர் உயிரிழந்தனர்.
1610: விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியது.
2110: காதலியைக் கொன்ற வழக்கில், தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர பாரா ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸாக்கு 5 ஆண்டுகள்
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2310: சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான ராணுவம் ஒரு மாதம் நடத்திய விமானத் தாக்குதலில் 553 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவர்களில், 464 பேர் ஐ.எஸ். தீவிரவாதிகள், 57 பேர் அல்-காய்தாவின் அல்-நூஸ்ரா பிரிவைச் சேர்ந்தவர்கள். எஞ்சியவர்கள் பொதுமக்கள் ஆவர்.

2910: இலங்கையின் பதுளை மாவட்டத்தில் மண் சரிவு ஏற்பட்டதில், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தேயிலைத் தொழிலாளர்களின் வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில், 50 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
2910: வங்கதேசத்தில் 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரின்போது போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக, ஜமாத்-இ-இஸ்லாமி கட்சித் தலைவர் மோடயுர் ரஹ்மான் நிஜாமிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
3110: நைஜீரியாவில் 219 பள்ளிச் சிறுமிகளை "போகோ ஹராம்' பயங்கரவாதிகள் கடத்திச் சென்று, மதம் மாற்றி திருமணம் செய்ததாக அரசுத் தரப்பு கூறிய குற்றச்சாட்டை அந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் மறுத்தார்.
நவம்பர்

211: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான முக்கிய எல்லைப் பகுதியான வாகாவில் கொடியிறக்க நிகழ்ச்சி முடிந்தவுடன், நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 11 பெண்கள், 3 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 55 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
211: அமெரிக்காவின் சிகாகோ நகரில் நிக் வாலண்டா என்ற வீரர், பாதுகாப்புக் கவசமின்றி, பல மாடிக் கட்டடங்களுக்கு இடையில் கயிற்றின் மீது நடந்து சென்று சாதனை படைத்தார்.
1011: நைஜீரியாவில் மேற்கத்திய கல்வி முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பள்ளி மாணவர்கள் 50 பேர் உயிரிழந்தனர்.
1211: ஐரோப்பிய விண்கலமான ரோùஸட்டா, 67பி/சுரிமோவ்-கெரசிமென்கா என்ற வால்நட்சத்திரத்தை வெற்றிகரமாகச் சென்றடைந்தது.
1811: சீனாவின் யீவு நகரில் இருந்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்கு 13,000 கி.மீ. தொலைவுக்கு சரக்கு ரயில் சேவையை சீனா தொடங்கியது.
2111: சிறார் திருமணத்துக்கு உலக நாடுகள் தடை விதிக்க வலியுறுத்தி ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2311: ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணத்தில் உள்ள கைப்பந்துப் போட்டி மைதானத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.
2311: கேரளத்தைச் சேர்ந்த குரியகோஸ் இலியாஸ் சவாரா, சகோதரி யூப்ரேஷியா ஆகியோரை புனிதர்களாக போப் பிரான்சிஸ் அறிவித்தார்.
2911. எகிப்தில் 2011ஆம் ஆண்டு அதிபருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டிசம்பர்
212: கென்யாவில் ஷெபாப் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கல் குவாரி தொழிலாளர்கள் 36 பேர் உயிரிழந்தனர்.
612: யேமனில் அமெரிக்கப் பத்திரிகையாளர் லூக் சோமர்ஸ், தென் ஆப்பிரிக்காவின் ஆசிரியர் பியரி கோர்கி ஆகிய இருவரும் அல்-காய்தா தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
712: பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் மாகாணத்தில் ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
1012 நார்வேவிய் ஓஸ்லோ நகரில் அமைதிக்கான நோபல் பரிசை, இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தியும், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசஃப்சாயும் பெற்றுக்கொண்டனர்.
1112: காங்கோ நாட்டில் டான்கன்யிகா என்ற ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 129 பேர் உயிரிழந்தனர். 221 பேர் காப்பாற்றப்பட்டனர்.
1312: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
1512: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உணவகம் ஒன்றில் இரண்டு இந்தியர்கள் உள்ளிட்ட 12 பேரை 17 மணி நேரம் பிடித்து வைத்திருந்த ஹரோன் மோனிஸ் என்பவர் அதிரடிப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1612: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவத்தினர் நடத்தும் பள்ளிக்குள் தலிபான் தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல், துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 132 குழந்தைகள் உள்பட 148 பேர் கொல்லப்பட்டனர்.
1712: அமெரிக்கா-கியூபா இடையே 18 மாதங்களாக நடைபெற்று வந்த ரகசியப் பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து, இரு நாடுகளும் உறவைப் புதுப்பித்துக் கொண்டன. இதன் மூலம், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த பகைமை உணர்வு முடிவுக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
