தொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

பாகிஸ்தானில் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 29 பேர் பலி!

பெஷாவரில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது பற்றி..

Updated On :

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் தனியார் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 29 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

லேடி ரீடிங் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் முஹம்மது ஆசிம் கூறுகையில்,

இந்தச் சம்பவத்தில் 6 மாணவிகள் உள்பட 28 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியை உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஆசிம், உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 13 வயது அல்லது அதற்கும் குறைவானவர்கள்.

பெஷாவர் துணை ஆணையர் அஃபாக் வசீர், இந்தக் கட்டட விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிந்து விழுந்த கட்டடத்திற்கு அடியில் சிக்கியிருக்கக்கூடிய குழந்தைகள், பள்ளி ஊழியர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார். அவர்களுக்குச் சிறந்த மருத்துவச் சிகிச்சையை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஆளுநர் பைசல் கரீம் குந்தியும் இந்த மேற்கூரை விபத்து குறித்துத் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.