சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்! வெற்றி வீடு! பாமணி இல்லத்தில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு

டிசம்பர்

ஏர்செல் மேசிஸ் வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

Updated On :

தமிழ்நாடு

16. ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

22. தமிழகத்தில் மழை வெள்ள நிவாரணத்துக்காக ரூ.25,912 கோடி தேவை என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.

23. 2016-ல் நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்தார்.

24. பூரண மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்தி நமது இலக்கு மதுவிலக்கு என்ற கோஷத்துடன் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் நடைப்பயணம் தொடங்கினார்.

25. 2016-ல் நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

25. தமிழக உளவுத் துறை ஐஜி உள்பட காவல் துறை உயர் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

25. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தராக எஸ். கீதாலட்சுமி நியமிக்கப்பட்டார்.

29. சென்னையில் வெள்ளத்தால் வீடு இழந்த 10 ஆயிரம் குடும்பங்களுக்கு அடுக்கு மாடிக் குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

30. தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாரதிய ஜனதா கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர ராவ் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.

31. அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் கூட்டணி முடிவு செய்யப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.

31. தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையை புரட்டிப் போட்ட மழை!

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலம் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காலம். இந்த ஆண்டு பருவமழை வழக்கம் போல் தொடங்கினாலும், நவம்பர் 15-ஆம் தேதி 24 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் சென்னை மாநகரம் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ள நீரால் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தனித்துவிடப்பட்டனர்.

மீண்டும் நவம்பர் 28 மற்றும் 29-ம் தேதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக செம்பரம்பாக்கத்தில் 26 செ.மீ. மழையும் பொன்னேரியில் 37 செ.மீ. மழையும் பதிவானது. அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது டிசம்பர் 1-ம் தேதி தாம்பரத்தில் அதிகபட்சமாக 49 செ.மீ. மழை கொட்டியது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.

வரலாறு காணாத அளவில் பெய்த கன மழையால் சென்னை மாநகரம் தீவுபோல் காட்சி அளித்தது. ரயில், விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முதல் முறையாக சென்னை விமானநிலையம் 5 நாள்கள் மூடப்பட்டது. அடையாறு, கூவம் நதிகளில் கட்டுக்கடங்காத வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது.

வடகிழக்கு பருவமழை காரணமாகவும், மழை, வெள்ள பாதிப்புகளாலும் 400-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். வெள்ளத்தில் சிக்கித் தவித்த 18 லட்சம் பேர் ஹெலிகாப்டர், படகுகள் மூலம் ராணுவத்தினர், பேரிடர் மீட்புப் படையினர் மாவட்ட நிர்வாகத்தினர் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் ரூ.50,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்பட்டது.

மத்திய அரசு, வெள்ள பாதிப்பு காரணமாக தமிழக அரசுக்கு முதல் கட்டமாக ரூ.940 கோடி வழங்கியது. இதைத் தொடர்ந்து வெள்ளச் சேதத்தைப் பார்வையிட்ட பிரதமர் மோடி மேலும் ரூ.1,000 கோடி வழங்குவதாக அறிவித்தார். ஹெலிகாப்டர் மூலம் வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா சீரமைப்புப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.8,481 கோடி வழங்க வேண்டும் என்றும் சென்னையை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

*******************

இந்தியா

3. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாக்குர் பொறுப்பேற்றார்.

10. கார் விபத்து வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஹிந்தி நடிகர் சல்மான் கானை விடுவித்து மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

15. தில்லி தலைமைச் செயலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மீதான கிரிக்கெட் சங்க முறைகேடு புகார் மற்றும் விசாரணை அறிக்கை தொடர்பாக தில்லி அரசிடம் இருந்த கோப்புகளை ஆய்வு செய்யவே சிபிஐ சோதனை நடத்தப்பட்டதாக அந்த மாநில முதல்வர் கேஜரிவால் குற்றம்சாட்டினார்.

16. தமிழக கோயில்களில் ஆகம விதிகளின் படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

18. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகளை அபகரித்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவரும் தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இருவருக்கும் நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டது.

19. தில்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா கொலையில் தொடர்புடைய சிறார் குற்றவாளி தண்டனைக் காலம் முடிந்து விடுவிக்கப்பட்டார்.

21. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் "எஸ்.சி., எஸ்.டி. சட்டத் திருத்த மசோதா' மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேறியது. முன்னதாக, மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டது.

22. 16-ல் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்கள் கொடுங்குற்றம் புரிந்தால், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வகை செய்யும் சிறார் நீதி சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

22. குற்றச்செயல்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களை பெரியவர்களாகக் கருதி கடும் தண்டனை அளிக்க வகை செய்யும் "சிறார் நீதிச் சட்ட திருத்த மசோதா' மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

22. எல்லைப் பாதுகாப்பு படைக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் தில்லியில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானதில் 10 வீரர்கள் உயிரிழந்தனர்.

22. தெலங்கானா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வில் அடைந்த தோல்வியால் விரக்தியடைந்த இளைஞர் தமது பெற்றோர் உள்பட 24 பேரை கத்தியால் குத்தினார். அவரை காவல் துறை சுட்டுக் கொன்றது.

22. 2 ஜி வழக்கில் சிபிஐ இறுதி வாதம் நிறைவடைந்தது. பிப்ரவரி 1-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

23. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ரஷியா புறப்பட்டுச் சென்றார்.

23. தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பாக, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத், அக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

23. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நிறைவு பெற்றது. மக்களவையில் 13, மாநிலங்களவையில் 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

23. பாகிஸ்தானுக்காக இந்தியத் தூதராக கௌதம் பம்பாவாலே நியமிக்கப்பட்டார்.

25. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வரும் வழியில், இந்தியப் பிரதமர் திடீரென்று பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டு அந் நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்தார்.

28. வரி செலுத்தத்தக்க ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு உருளை மானியம் வழங்குவதில்லை என்று மத்திய அரசு முடிவு.

*******************

உலகம்

9. ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலைத் தேர்வு செய்தது பிரபல ஆங்கில வார இதழ் "டைம்'.

12. பருவநிலை மாற்றம், புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பாரீஸில் நடைபெற்ற ஐ.நா. மாநாட்டில் 196 நாடுகள் உடன்படிக்கை. புவி வெப்பமாதல் நடவடிக்கைகளில் வளரும் நாடுகளுக்கு ஏற்படும் செலவுகளை வளர்ந்த நாடுகள் ஏற்க வேண்டுமென்ற இந்திய நிலைப்பாடு ஏற்பு.

12 சவூதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 20 பெண் வேட்பாளர்கள் வெற்றி. பெண்கள் கார் ஓட்டவும் தடை விதிக்கப்பட்ட அந்நாட்டில், அவர்கள் முதல் முதலாகத் தேர்தலில் வாக்களிக்கவும் வேட்பாளர்களாகப் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்டனர்.

15. இஸ்லாமிய நாடுகளில் நிகழ்ந்து வரும் பயங்கரவாதத்துக்கு எதிராகத் தாக்குதல் தொடுக்க 34 நாடுகளின் கூட்டணியை அறிவித்தது சவூதி அரேபியா.

20. "பிரபஞ்ச அழகி' போட்டியில் வென்றார் பிலிப்பின்ûஸச் சேர்ந்த பியா அலோன்ஸோ. முன்னதாக, கொலம்பியாவின் அரியாட்னா அரெவாலோ (இடது) வென்றதாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டது. சில வினாடிகளிலேயே அது தவறு என்று அறிவிக்கப்பட்டதால் கிரீடத்தை இழந்தார்.

21. நேபாளத்தில் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மதேசிகளுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், நேபாள அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவிப்பு.

25. இந்தியா நிதிஉதவியுடன் ஆப்கன் தலைநகர் காபூலில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

29. பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள அரசு அலுவலகத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 26 பேர் பலியானார்கள்.


*******************

விளையாட்டு

7. தில்லி டெஸ்டில் வென்றதன் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.

8. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்குப் பதிலாக புணே, ராஜ்கோட் நகரங்களை மையமாகக் கொண்டு இரு அணிகள் களமிறங்கவிருப்பதாக பிசிசிஐ அறிவிப்பு.

15. இந்திய கேப்டன் தோனியை வாங்கியது புணே அணி.

20. இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் கோவாவை தோற்கடித்து சாம்பியன் ஆனது சென்னையின் எப்.சி.

20. கோவா அணியின் உரிமையாளர்களில் ஒருவரான தத்தாராஜ் சல்கோகரை தாக்கியதாக சென்னையின் எப்.சி. அணியின் மிட்பீல்டர் இலானோ புளூமர் கைது செய்யப்பட்டார்.

21. சர்வதேச கால்பந்து சம்மேளன (பிஃபா) முன்னாள் தலைவர் செப் பிளேட்டர், ஐரோப்பிய கால்பந்து சம்மேளன தலைவர் மைக்கேல் பிளாட்டினி ஆகியோருக்கு 8 ஆண்டுகள் தடை விதித்தது பிஃபா நன்னெறி குழு.

22. டென்னிஸில் மகளிர் பிரிவில் இரட்டையர் பிரிவு உலக சாம்பியனாக சானியா - ஹிங்கிஸ் ஜோடி தேர்வு செய்யப்பட்டது.

23. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு, ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் உள்பட இரண்டு ஐசிசி விருதுகள்.

23. கல்வி நிலையங்களில் சதுரங்க விளையாட்டை ஊக்கவிக்க வேண்டும் என்று விஸ்வநாதன் ஆனந்தன் வலியுறுத்தினார்.

28. சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்காக தமிழக அரசு சார்பில் ரூ. 2 கோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

28. இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றது.

31. ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் வரிசையில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்து சாதனை.

31. பிசிசிஐயின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராத் கோலி தேர்வு.

*******************

சினிமா

3. சென்னை வெள்ள நிவாரணத்தில் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நேரடியாக குதித்து மக்களுக்கு உதவினர்.

4. "மக்களின் வரிப்பணம் என்ன ஆனது' என கமல் பரபரப்பு பேட்டியளித்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

11. இணையத்தில் வெளியான சிம்பு, அனிருத்தின் "பீப் சாங்' எனப்படும் பாடலுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

27. பீப் பாடல் விவகாரத்தால் நடிகர் சிம்பு தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை என்று அவரது தந்தையும் நடிகருமான டி.ராஜேந்தர் கூறினார்.

31. நடிகர் சங்க கணக்கு விவகாரம் - தவறான தகவல்களைத் தருவதாக சரத்குமார் மீது நடிகர் சங்கம் தகவல்

31. நடிகை வித்யா பாலன், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

*******************

விருதுகள்

17.  மூத்த தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டது.

30. என்எல்சி நிறுவனத்துக்கு ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை விருதை மத்திய அரசு வழங்கியது.

30. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ரகுவீர் சௌதரி, இந்த ஆண்டுக்கான ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

*******************

உதிர்ந்த மலர்கள்

2. தொழிலதிபரும், கல்வியாளருமான எம்.ஏ.எம்.ராமசாமி காலமானார். இவர், செட்டிநாடு குழுமத்தின் இணை நிறுவனர் ஆவார்.

22. தமிழக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி (52), உடல் நலக் குறைவால் காலமானார்.

25. பழம்பெரும் ஹிந்தி நடிகை சாதனா சிவதசானி (74), மும்பையில் காலமானார்.

29. தமிழறிஞர் தமிழண்ணல் (88), மதுரையில் காலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.