மார்ச்
வேளாண்மைத் துறையில் பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான புகாரின் பேரில் திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்.
தமிழ்நாடு
5. வேளாண்மைத் துறையில் பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான புகாரின் பேரில் திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்.
27. மேக்கேதாட்டு பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டும் விவாகரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன் மொழிந்தார்.
29. திருவாரூரில் உள்ள மத்தியப்பல்கலைக் கழகத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் சாவு; 18 பேர் பலத்த காயம்.
31. அரசு பேருந்து எரிப்பு தொடர்பான வழக்கில் போதிய ஆவணங்கள் இல்லாததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்பட 18 பேரை விடுதலை செய்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு.
*******************
இந்தியா
1. ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியும் முடிவுக்கு வந்தது. அரசியலில் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட மக்கள் ஜனநாயகக் கட்சியும் (பிடிபி), பாஜகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. பிடிபியின் நிறுவனத் தலைவர் முஃப்தி முகமது சயீது முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பாஜகவைச் சேர்ந்த நிர்மல் சிங் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.
14. இலங்கை சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணம், அனுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். அப்போது இலங்கை அதிபர் சிறீசேனாவும் உடனிருந்தார். யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட மறுவாழ்வு இல்லங்களை தமிழர்களிடம் மோடி ஒப்படைத்தார்.
14. லண்டனில் உள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திறந்து வைத்தார். விழாவில், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
16. ஹரியாணாவில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கக் கோரிய மசோதா, அந்த மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.
16. ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
*******************
உலகம்
9. ஆப்பிள் நிறுவனத்தின் "ஸ்மார்ட்' கைக்கடிகாரங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
13. பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ், மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீதுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
15. பாகிஸ்தானின் லாகூர் நகரில் இரு கிறிஸ்தவ தேவாலயங்களில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.
18. இஸ்ரேலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமோக வெற்றி பெற்று, மீண்டும் அந்த நாட்டின் பிரதமரானார்.
20. யேமன் தலைநகர் சனாவிலுள்ள பல்வேறு ஷியா பிரிவு மசூதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 142 பேர் உயிரிழந்தனர்.
22. போலந்து நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் ஹெர்பா என்பவர் "தைபே 101' கட்டடத்தின் 3,139 படிகளையும் மிதி வண்டியை ஓட்டியபடியே ஏறி கின்னஸ் சாதனை படைத்தார்.
24. பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் ஜெர்மன்விங்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில், அதிலிருந்த 150 பேர் உயிரிழந்தனர். அதனை செலுத்திய விமானி, வேண்டுமென்றே விமானத்தை மலையில் மோதச் செய்தது விசாரணையில் தெரியவந்தது.
*******************
விளையாட்டு
11. ஸ்காட்லாந்துக்கு எதிராக சதமடித்ததன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் இலங்கையின் குமார் சங்ககாரா.
12. ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான கர்நாடகம் மீண்டும் சாம்பியன் ஆனது. இறுதி ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 217 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகத்தைத் தோற்கடித்தது கர்நாடகம்.
21. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 237 ரன்கள் குவித்தார் நியூஸிலாந்தின் மார்ட்டின் கப்டில்.ல இதன்மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
24. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது நியூஸிலாந்து.
26. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறியது நடப்பு சாம்பியனான இந்தியா.
28. சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார் இந்தியாவின் சாய்னா நெவால். இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீராங்கனை சாய்னா ஆவார்.
29. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தைத் தோற்கடித்து 5-வது முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.
31. முன்னாள் நியூஸிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.
31. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் முஸ்தபா கமல் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
*******************
சினிமா
2. இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை ஒளிபரப்பவும், விற்பனை செய்யவும் மூன்று நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.
7. கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாக இயக்குநர் சேரன் மீது ஜெமினி நிறுவனம் புகார் அளித்தது.
*******************
விருதுகள்
"ஷேடோ ஃபிரம் லடாக்' என்ற ஆங்கில நாவலை "லடாக்கில் இருந்து கவிழும் நிழல்' என்று தமிழில் மொழியாக்கம் செய்த எழுத்தாளர் சா.தேவதாஸூக்கு சாகித்ய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

