சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்! வெற்றி வீடு! பாமணி இல்லத்தில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு

மே

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Updated On :

தமிழ்நாடு

1. சிதம்பரம் நடராஜர் கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

4. கோவையில் மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் ரூபேஷ் என்கிற ஜோகி உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

11. சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு.

14. திமுகவிலிருந்து திருச்செந்தூர் பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி மாவட்டச் செயலர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் நீக்கப்படுவதாக க.அன்பழகன் அறிவிப்பு.

17. சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பி.வெற்றிவேல் ராஜிநாமா.

23. சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் ஜெயலலிதா 5-ஆவது முறையாக முதல்வராக பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

*******************

இந்தியா

5. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன "ஆகாஷ்' ஏவுகணை, இந்திய ராணுவத்தின் பாதுகாப்புப் பணிகளில் சேர்க்கப்பட்டது.

6. ஒரே மாதிரியான வரிவிதிப்புக்கு வழிவகுக்கும் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தங்களது கோரிக்கைகள் அந்த மசோதாவில் இடம்பெறவில்லை என்று கூறி அதற்கான வாக்கெடுப்பை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது.

6. நில மோசடி வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி ஆகியோர் மீது அந்த மாநில லோக் ஆயுக்த போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

6. குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றி ஒருவரை கொன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும், சல்மான் கான் சிறைக்குச் செல்வதற்கு முன்பாகவே மும்பை உயர் நீதிமன்றம் உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்கியது.

7. சிறார் நீதிச் சட்டத் திருத்தம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 16-லிருந்து 18 வயது வரை உள்ள சிறார் குற்றவாளிகள் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டால், அவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க இந்த சட்டத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

8. புணேவில் கால் சென்டரில் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கி கொலை செய்ததாக கார் ஓட்டுநர் ஒருவருக்கும், அவரது நண்பருக்கும் மரண தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

9. ஏழைகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களான பிரதமரின் விபத்துக் காப்பீட்டு திட்டம், ஆயுள் காப்பீட்டுத் திட்டம், ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை கொல்கத்தாவில் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.

11. வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பணத்தை பதுக்குவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் கருப்புப் பணத் தடுப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது.

12. தமிழ்நாட்டைச் சேர்ந்த சண்முகநாதன் மேகாலய மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

13. அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் ஆகியோர் படங்களை மட்டுமே இடம்பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. மாநில முதல்வர்கள் உள்பட வேறு தலைவர்களின் படங்களை வெளியிடத் தடை.

*******************

உலகம்

3. கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், டல்லாஸ் நகர் அருகே கல்வெல் அரங்கில் முகமது நபியின் கேலிச் சித்திரம் வரையும் போட்டி நடத்தப்பட்டது. அப்போது அங்கு காரில் வந்த இரு மர்ம நபர்கள் துப்பாக்கி தாக்குதலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர்.

8. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதில், பிலிப்பின்ஸ், நார்வே மற்றும் இந்தோனேசிய நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்தனர். அவர்கள் கலந்து கொள்ளச் சென்ற நிகழ்ச்சியில் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் பங்கு கொள்வதாக இருந்தது. பிரதமர் நவாஸ் ஷெரீஃபைக் குறிவைத்தே அந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக தலிபான் கூறியது.

8. பிரிட்டன் பொதுத் தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் என கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்த நிலையில் டேவிட் கேமரூன் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆனார்.

11. குஜராத் வம்சாவளியைச் சேர்ந்த ப்ரீத்தி படேல் பிரிட்டன் அமைச்சராகப் பதவியேற்றார்.

12. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண சட்டசபைக்கு முதன் முறையாக தேர்வான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டேனியல் மூக்கே பகவத் கீதை சாட்சியாகப் பதவிப் பிரமாணம் செய்தார்.

13. ஆப்கன் தலைநகர் காபூலில் பார்க் பேலஸ் விடுதியில் தங்கியிருந்த 4 இந்தியர்கள் உள்பட 14 பேரை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

13. பாகிஸ்தானின் கராச்சி நகரில், பேருந்தில் பயணம் செய்த 16 பெண்கள் உள்பட 45 ஷியா பிரிவு முஸ்லிம்களை போலீஸ் சீருடையில் வந்த இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

16. எகிப்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஆதரவாளர்களுடன் இணைந்து சிறையைத் தகர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் முகமது மோர்ஸி, முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர் முகமது பதி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு கெய்ரோ குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

23. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அமெரிக்கன் ரிவர் கல்லூரியில் பயின்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது தனிஷ்க் ஆபிரகாம், கணக்கு, அறிவியல், அயல் மொழி ஆகிய பிரிவுகளில் பட்டம் வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினான். அமெரிக்க அதிபர் ஆவதே தனது லட்சியம் எனத் தெரிவித்துள்ளான் தனிஷ்க்!

*******************

விளையாட்டு

24. ஐபிஎல் இறுதிப் போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது மும்பை இண்டியன்ஸ்.

29. சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) தலைவராக 5-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார் செப் பிளேட்டர்.

30. ஓபன் எராவில் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் தலா 50 ஆட்டங்களில் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்.

*******************

சினிமா

3. நடிகை ஜெயசித்ரா வீட்டில் 25 கிலோ வெள்ளி திருடு போனது.

10. த்ரிஷா - வருண்மணியன் நிச்சயதார்த்தம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது.

10. க்யூப், யூ எப் நிறுவனங்களுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.