சமூகத்தின் எதிரொலிப்பாக சினிமா திகழ்கிறது என்றும் சினிமாவில் இருந்து இளைஞர்கள் மற்றும் சமூகத்தினர் எதையேனும் கற்றுக்கொள்கின்றனர் என்றும் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கில் நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 'இந்திய சினிமா இளைஞர்களுக்கு சரியான பாடத்தை கற்றுக்கொடுக்கிறது என்று உறுதியாக கூற முடியாது. ஆனால், சமூகத்தின் எதிரொலிப்பாக சினிமா திகழ்கிறது. சினிமாவில் இருந்து இளைஞர்கள் மற்றும் சமூகத்தினர் எதையேனும் கற்றுக்கொள்கின்றனர்.
மேலும், சினிமா ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருக்கிறது; சமூகப் பிரச்னைகளை பேசுகிறது; சமுதாயத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. நிஜ வாழ்க்கை, திரையில் வரும் வாழ்க்கை ஆகிய இரண்டையுமே எடுத்துரைக்கிறது.
இயக்குநர்கள் தங்களது திரைப்படங்களின் வாயிலாக மக்களுக்கு ஏதேனும் ஒரு செய்தியை எடுத்துரைக்க வேண்டும். அது கல்வி, விளையாட்டு அல்லது சமூகம் சார்ந்த ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். சினிமாவில் சமூக தாக்கம் எப்போது ஏற்படத் தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால், அதன் தாக்கம் அதிகரித்துக்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். மக்களுக்கும் படத்தின் வாயிலாக ஏதேனும் செய்தி அளிக்க வேண்டும் என்று அவரின் வாயிலாகவே புரிந்துகொண்டு அதனை செயல்படுத்தியும் காட்டுகிறேன்.
அமிதாப் பச்சன் ஒரு சிறந்த நடிகர். அவர் திரையில் கருத்துகளை வெளிப்படுத்தும்விதம் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. சமூகப் பிரச்னைகளையும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். பொழுதுபோக்குடன் சமூகத்திற்கான செய்தியும் இருக்க வேண்டும்.
எனக்கு ஒத்துப்போகாத சில காட்சிகளை நான் இயக்குநரிடம் கூறி தவிர்த்து விடுவேன். சில வசனங்கள், சில பாடல்களை எனது படத்தில் தவிர்த்திருக்கிறேன். மற்றபடி எனது சினிமாவில் விதிமுறைகள் ஏதும் இல்லை. எனக்கென்று சில கொள்கைகள் உள்ளன. எனக்கான கதையை முதலில் இயக்குநர்கள்தான் முடிவெடுக்கின்றனர். முடிவு செய்த பின்னரே அவர்கள் என்னிடம் கதையை கூறுகிறார்கள். எனக்கு கதை பிடிக்கும்பட்சத்தில் ஏற்றுக்கொள்கிறேன்.
இயக்குநர்கள் திரையில் எதனைக் காண்பிக்க வேண்டும் என்று உணர்வுப்பூர்வமாகவே முடிவு செய்கிறார்கள். உணர்வுப்பூர்வமான விஷயங்களை வெளிப்படுத்துவதில் அவர்கள் கவனமாகவே இருக்கிறார்கள். சமீபத்தில் பல வித்தியாசமான படங்கள் திரைக்கு வந்துள்ளன. சமூகத்திற்கான படங்கள் தொடர்ந்து வரவேண்டும்' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே? 251 ரன்கள் வெற்றி இலக்கு!

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!

”விஜய் மனதில் பாஜக இருக்கிறது!” குஷ்பு பேட்டி
வீடியோக்கள்

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

