இரட்டிப்பு லாபம் தரும் "வலங்கைமான்' செங்கல்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரத்தில் ஆயிரக்கணக்ககான கூலித்தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கி, லாபம் தரும் தொழிலாக செங்கல் சூளைத் தொழில் திகழ்கிறது.
இரட்டிப்பு லாபம் தரும் "வலங்கைமான்' செங்கல்
Published on
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரத்தில் ஆயிரக்கணக்ககான கூலித்தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கி, லாபம் தரும் தொழிலாக செங்கல் சூளைத் தொழில் திகழ்கிறது.
 காவிரி மற்றும் அதன் கிளை ஆற்றுப்படுகைகளில் கிடைக்கும் மண்ணைக் கொண்டு தயாராகும் செங்கல் தரம்வாய்ந்தது. இத்தகைய தரமான மண் வலங்கைமான் வட்டாரத்தில் உள்ளதால் இந்த பகுதியில் செங்கல் காலவாய்த்தொழில் நன்கு வளர்ச்சி அடைந்து வருகிறது.
 இத்தொழில் கோடை காலத்தில் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் நடைபெற்று வருகிறது. செங்கல் காலவாய் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் நிலம் தயார் செய்யப்படுகிறது. செங்கல் தயாரிப்பில் ஒரு காலவாயில் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரண்டு, இரண்டு பேராக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் முதல் நாள் மண்ணை தண்ணீர் விட்டு கிளறி ஊற வைக்கின்றனர். மறுநாள் காலையில் இருவரும் செங்கல் தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். இருவர் குழு ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் முதல் 1,500 வரை கற்களைத் தயார் செய்கின்றனர்.
 இதில், ஆயிரம் கல்லுக்கு இருவருக்கும் ரூ.500 முதல் ரூ.600 வரை கூலியாக வழங்கப்படுகிறது. தயாரிக்கப்பட்ட பச்சைக் கல் 5 நாட்கள் வரை காயவைக்கப்படுகிறது. அதன் பின்னர் காலவாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. பிறகு விறகு, தென்னை மட்டையைக் கொண்டு காலவாய் எரிக்கப்படும். ஒரு வாரத்திற்கு பிறகு காலவாயைப் பிரித்து கல் வெந்துள்ளதைப் பார்ப்பார்கள்.
 சுட்ட செங்கல் விற்பனைக்கு வரும். இந்த செங்கல்கள் லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. காலவாய்த் தொழில் செய்யும் முதலாளிகளுக்கு முதலீடு செய்யும் பணத்தில், இரு மடங்கு லாபத்தை இந்தத் தொழில் வழங்குகிறது.
 செங்கல் காலவாய்த்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் பொதுவாக மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்க வேண்டும். காலவாய் அமைப்பதில் அரசின் விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.
 எஸ். சந்தானராமன், நீடாமங்கலம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com