வலி நிவாரண சஞ்சீவீ: தென்னமரக்குடி எண்ணெய்..!

ஆர்.எஸ். கிருஷ்ணா அன்ட் கோ தென்னமரக்குடி எண்ணெய் 75 ஆண்டுகால பழைமை வாய்ந்த சித்த மருத்துவ எண்ணெய் உற்பத்தி செய்யும் ஸ்தாபனமாகும்
வலி நிவாரண சஞ்சீவீ: தென்னமரக்குடி எண்ணெய்..!
Published on
Updated on
1 min read

ஆர்.எஸ். கிருஷ்ணா அன்ட் கோ தென்னமரக்குடி எண்ணெய் 75 ஆண்டுகால பழைமை வாய்ந்த சித்த மருத்துவ எண்ணெய் உற்பத்தி செய்யும் ஸ்தாபனமாகும். 3 தலைமுறை கண்ட இந்த ஸ்தாபனத்தின் உற்பத்தி படிப்படியாக முன்னேறி, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விற்பனை கொடிகட்டி பறக்கிறது.
 இந்த அற்புதமான சித்த எண்ணெய் தயாரிப்பை முதன்முதலில் நாகை அருகே தென்னமரக்குடியில் தொடங்கியவர் காலம்சென்ற ஆர். சந்தானகிருஷ்ண நாயுடு. அந்தக் காலத்திலேயே அவர் இந்த தென்னமரக்குடி எண்ணெய்யை உற்பத்தி செய்து, தமிழகமெங்கும் பிரசித்தம் அடையும்படி செய்தார். இந்த எண்ணெய்க்கு தேவைப்படும் மரவெட்டி எண்ணெய் கேரளத்திலிருந்து தருவிக்கப்படுகிறது. இத்தோடு, பச்சிலைகளும், கடைச் சரக்குகளும் சேர்ந்து எல்லா மூட்டு வலிகளையும், ரண காயங்களையும், எல்லா சொரிசிரங்குகளையும் ஆற்றும் வல்லமை படைத்ததாக இருப்பதால், இதனை இந்தியா மட்டுமின்றி அயல்நாட்டவர்களும் விரும்பி வாங்கி உபயோகிக்கின்றனர். தற்போது அவரது மகன் ஆர்எஸ்கேவி. ராகவன், தனது தந்தை விட்டுச்சென்ற ஸ்தாபனத்தை விரிவாக்கி, வியாபாரத்தை விரிவுபடுத்தியுள்ளார். அவருக்கு உதவியாக அவருடைய மகன்கள் எஸ்.வி. கோபாலகிருஷ்ணன், எஸ்.வி. கலியராஜ், எஸ்.வி.பாண்டுரெங்கன் மூவரும் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
 சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் ஆர்.எஸ்.கிருஷ்ணா தென்னமரக்குடி எண்ணெய் பிரபலமாகி அந்நாட்டு மக்கள் விரும்பி வாங்கி பயன்படுத்தி பலனடைகின்றனர். அற்புதமான வலி நிவாரண சஞ்சீவியாக விளங்கும் இந்த எண்ணெய் நிறுவனத்தை பெருமைப்படுத்தும் வகையில் மத்திய அரசு ஏற்றுமதிக்கான பரிசை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com