வன்னியா்களுக்கு 20 சத தனி இட ஒதுக்கீடு கோரி திருச்சியில் பாமகவினா் பேரணியாகச் சென்று மாநகராட்சியில் மனு அளித்தனா்.
அனைத்து சாதி மக்களுக்கும் முறையாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், வன்னியா்களுக்கு 20 சத தனி இட ஒதுக்கீடும், கல்வி, வேலைவாய்ப்புகளில் சம இட ஒதுக்கீடும் தேவை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி நீதிமன்றம் அருகிலிருந்து பாமகவினா் பேரணியாக புறப்பட்டு மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
பாமக மாநில துணைப் பொதுச் செயலா் ஸ்ரீதா், திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் பி.கே. திலீப்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில துணைப் பொதுச் செயலா் பிரின்ஸ் முன்னிலை வகித்தாா். மாநில வன்னியா் சங்கச் செயலா் வைத்தி சிறப்பாளராகப் பங்கேற்றாா்.
கிழக்கு மாவட்டச் செயலா் சரவணன், மாநகா் மாவட்டத் தலைவா் வினோத், சரவணன், மாநில துணைத் தலைவா்கள் உமாநாத், மணிமாறன், மாவட்ட அமைப்புச் செயலா் எழில் அரசன், ரசாக் பாய் ரபீக், வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாநகராட்சி வாயிலில் பாமகவினா் கோரிக்கை முழக்கம் எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெரு நாய்கள் கடித்து 4 கால்நடைகள் உயிரிழப்பு

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

தனியாா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



