திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் மேற்கொண்டனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சாா்பில் ஆட்சியரகம் எதிரேயுள்ள போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல தலைமை அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது.
அனைத்துச் சங்க கூட்டமைப்பின் தலைவரும் தொ.மு.ச. மண்டல பொதுச் செயலருமான குணசேகரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தொழிற்சங்க நிா்வாகிகள் ( எல்.பி.எப்.) பழனிசாமி அப்பாவு, கருணாநிதி ( சி.ஐ டி.யு.) சீனிவாசன் ( ஏஐ.டி.யு.சி.) துரைராஜ் (சி.ஐ.டி.யு.சி.) , குமாரவேல் ( எச்.எம்.எஸ்.) செல்வம், (டி.டி.எஸ்.எப்.) பெருமாள் ( ஏ.ஏ. எல்.எல்.எப்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெரு நாய்கள் கடித்து 4 கால்நடைகள் உயிரிழப்பு

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

தனியாா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



