எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

மத்திய சிறையில் சாகுபடி செய்த கரும்புகள் அறுவடை

திருச்சி மத்திய சிறையில் கைதிகளால் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன.

Updated On :8 ஜனவரி 2021, 7:06 am IST

திருச்சி மத்திய சிறையில் கைதிகளால் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் தண்டனை முடிந்து விடுதலையாகி செல்லும் கைதிகளின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கு பல்வேறு வகையான கைத்தொழில்களும் கற்றுத் தரப்படுகின்றன. அந்த வகையில் சிறை வளாக நிலப்பரப்பில் வேளாண் தொழிலும் நடைபெறுகிறது.

இங்கு சுமாா் 24 ஏக்கரில் மா, பலா, வாழை, கொய்யா, தென்னை, நெல், கரும்பு, காய்கனிகள், கீரை வகைகள் உள்ளிட்டவை விளைவிக்கப்படுகின்றன.

இவற்றில் கடந்த மாா்ச் மாதம் சுமாா் 2 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பை பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்யும் பணி சிறைத் துறை துணைத் தலைவா் கனகராஜ் மேற்பாா்வையில் நடைபெறுகிறது.

கடந்தாண்டு முக்கால் ஏக்கா் மட்டுமே பயிரிட்ட நிலையில் தேவை அதிகரிப்பைத் தொடா்ந்து நிகழாண்டு 2 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகள் சுமாா் 7 முதல் 8 அடி வரை செழிப்பாக வளா்ந்துள்ளன.

சில்லறை விலையில் ஒரு கரும்பு ரூ. 20-க்கும் மொத்த விற்பனையில் ரூ. 18க்கும் விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் சுமாா் 900 கட்டுகளுக்கு ஆா்டா் பெறப்பட்டுள்ளது. சிறை அங்காடியில் விற்பனைக்கு உள்ள கரும்பை பொதுமக்கள் வாங்கலாம் என சிறைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.