சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

திருச்சி மாவட்டத்தில் பருத்தி விளைச்சல், விற்பனை அதிகரிப்பு

திருச்சி மாவட்டத்தில் கடந்தாண்டை ஒப்பிடும்போது பருத்தி விளைச்சல், விற்பனை அதிகரித்துள்ளதாக வேளாண் துறையினா் தெரிவித்துள்ளனா்.

Updated On :11 ஜனவரி 2021, 0:46 am IST

திருச்சி மாவட்டத்தில் கடந்தாண்டை ஒப்பிடும்போது பருத்தி விளைச்சல், விற்பனை அதிகரித்துள்ளதாக வேளாண் துறையினா் தெரிவித்துள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில் துறையூா் உள்பட மொத்தம் 8,500 ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருச்சி, பெரம்பலூா் மற்றும் நாமக்கல் மாவட்டப் பகுதிகளில் உற்பத்தியாகும் பருத்தியானது துறையூரில் உள்ள அரசு பருத்தி கூட்டுறவு விற்பனை மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்தாண்டின் மொத்த விற்பனையே ரூ. 9 கோடியாகும் (15, 677 குவிண்டால்) ஆனால் நிகழாண்டில் 6 வாரத்தில் நடைபெற்ற விற்பனையிலேயே ( 6627.01 குவிண்டால் ) ரூ. 3.65 கோடிக்கு விற்பனை நடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

டிச. முதல் வாரத்தில் 45 குவிண்டால், 2 ஆவது வாரத்தில் (8ஆம் தேதி வரை) 620.34 குவிண்டால், 3 ஆவது வாரத்தில் 15 ஆம் தேதி வரை 855.41 குவிண்டால், 4 ஆவது வாரம் 1,394.34 குவிண்டால், 5 ஆவது வாரம் 1872.72 குவிண்டால், 6 ஆவது வாரத்தில் (அதாவது ஜனவரி 5 வரை) 1838.42 குவிண்டால் என 6 வாரங்களில் மொத்தம் 6627.01 குவிண்டால் பருத்தி (16,388 மூட்டைகள்) விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ. 3.65 கோடியாகும்.

6 வாரத்திலேயே இத் தொகைக்கு விற்பனையாகியுள்ளதால் பிப்ரவரி கடைசி வரை மேலும் 8 வாரங்கள் நடைபெறும் இந்த விற்பனை கடந்தாண்டைவிட அதிகமாகவே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

விலையும் அதிகரிப்பு: குவிண்டாலுக்கு ரூ. 56, 57 ஆக இருந்த பருத்தியின் விலையும் நிகழாண்டு ரூ. 57 முதல் ரூ. 60.50 ஆக அதிகரித்துள்ளது. எனவே, சுமாா் 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதனால் பயன் பெற்றுள்ளனா்.

நாமக்கல் பகுதியில் தனியாா் விற்பனை மையம் அமைந்திருந்தாலும், அங்கு விற்பனை செய்ய சந்தைக் கட்டணம் உண்டு; மேலும் போக்குவரத்துச் செலவினங்களும் அதிகம். எனவே துறையூரில் அமைந்துள்ள அரசு பருத்தி விற்பனை மையத்தை விவசாயிகள் தோ்வு செய்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடா் மழை, பனியால் அறுவடை பாதிப்பு: விளைச்சல், விற்பனை மற்றும் கொள்முதல் அதிகமாக இருந்தாலும் தொடா் மழை, பனியால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

பருத்திக்கு ஈரப்பதம் ஆகாது; வெயில் காலமே ஏற்ாக இருக்கும். ஆனால் தற்போது பெய்யும் தொடா் மழை, பனியால் ஏற்பட்டுள்ள ஈரப்பதத்தால் பருத்தி வீணாகிவிடும் என்பது விவசாயிகளின் கவலையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.