மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தரப்பில் ஆண்டுதோறும் பல்வேறு பணிகளுக்காக சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது.
அதன் படி, இந்த ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டில் 933 பணியிடங்கள், இந்தத் தோ்வு மூலம் நிரப்பப்படவுள்ளது. இதில் 33 பணியிடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத் தோ்வு மே மாதம் 24-ஆம் தேதி நடத்தப்படுகிறது.
யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் ஒருவர் எத்தனை முறை தேர்வை எழுதலாம், அதற்கான வயது வரம்பு குறித்து பின்வருமாறு காணலாம்.
சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் தகுதியுள்ள தேர்வர்கள் ஒவ்வொருவரும் 6 முறை இந்தத் தேர்வினை எழுதலாம். இருப்பினும், எஸ்சி/எஸ்டி/ஓபிசி (SC/ST/OBC) பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு (PwBD) தேர்வு எழுதுவதில் வயது வரம்பு தளர்வுகள் உள்ளன.
யுபிஎஸ்சி
வயது வரம்பு தளர்வு விவரம்
பொதுவாக சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவதற்கு ஒருவருக்கு குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்சமாக 32 வயது வரை எழுதலாம். இருப்பினும், ஒவ்வொரு பிரிவினருக்கும் வயது வரம்பு தளர்வுகள் உள்ளன.
எஸ்சி/எஸ்டி (SC/ST): வயது வரம்பு முடியும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வெழுதலாம். (32 + 5 = 37 வயது வரை)
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC): 9 முயற்சிகள். (32 + 3 = 35 வயது வரை)
மாற்றுத்திறனாளிகள் (PwBD): GL/EWS/OBC பிரிவினருக்கு 9 முயற்சிகள்; (32 + 10 = 42 வயது வரை)
மாற்றுத்திறனாளிகள் (PwBD): எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினர் வயது வரம்பு முடியும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வெழுதலாம். (32 + 15 = 47 வயது வரை)
Summary
Regarding how many times one can appear for the Civil Services Examination conducted by the Central Public Service Commission and what is the age limit...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
8 லட்சம் தேர்வர்களுடன் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தொடங்கியது!

அரசுப் பணியாளர்களுக்கான உச்ச வயது வரம்பு உயர்வு!

மறுதேர்வு தீர்வாகாது!

அணுமின் கழக மருத்துவமனையில் நர்ஸ், பார்மசிஸ்ட் பணிகள்: உடனே விண்ணப்பிக்கவும்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




