யுபிஎஸ்சி: முதல்நிலை - முதன்மைத் தேர்வுக்கான பொதுவான வழிமுறைகள்! - 1

யுபிஎஸ்சி: முதல்நிலை - முதன்மைத் தேர்வுக்கான பொதுவான வழிமுறைகளைப் பற்றி...
யுபிஎஸ்சி: முதல்நிலை - முதன்மைத் தேர்வுக்கான பொதுவான வழிமுறைகள்! - 1
Updated on
1 min read

யுபிஎஸ்சி முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுக்கான பொதுவான வழிமுறைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுக்கான பொதுவான வழிமுறைகள்

தேர்வர் கட்டாயமாக தங்கள் கைகளால் மட்டுமே தேர்வை எழுத வேண்டும். எந்தவொரு சூழலிலும் அவர்களின் தேர்வை எழுத மற்றொருவர் அனுமதிக்கப்படமாட்டார்.

இருப்பினும், பார்வைத் திறனற்றவராகவோ, இரண்டு கைகளும் செயல்பாடு இல்லாமல் இருந்தாலோ அல்லது பெருமூளை வாதம் (cerebral palsy - செரிபரல் பால்ஸி) ஆகியப் பிரிவுகளில் பாதிக்கப்பட்டிருந்தால், எழுத்தர் (scribe- ஸ்க்ரைப்) உதவியுடன் தேர்வெழுத தகுதியுடையவராகக் கருதப்படுவர்.

(i) மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 பிரிவு 2(ஆர்) கீழ் தேர்வர் தான் குறைபாடு உடையவர், தனக்கு எழுத்தர் தேவை என்ற சான்றிதழை சமர்ப்பித்தால், அந்தத் தேர்வருக்கு எழுத்தர் வசதியைப் பெறுவார். மேலும், தேர்வை எழுதுவதற்கு எழுத்தர் தேவை என்பதை அரசு சுகாதாரத் துறையின் தலைமை அதிகாரி அல்லது மருத்துவக் கண்காணிப்பாளரிடம் உறுதிப்படுத்த வேண்டும்.

(ii) தேர்வர்கள் தங்களின் சொந்த எழுத்தரைத் தேர்வு செய்யவோ அல்லது அதற்காக தேர்வாணையத்திடம் கோரிக்கை வைக்கவோ அனுமதி உண்டு. எழுத்தரின் விவரங்கள், அதாவது, சொந்த எழுத்தர் அல்லது தேர்வாணையத்தின் எழுத்தரா என்பது மற்றும் தேர்வர்கள் தங்களின் சொந்த எழுத்தரைக் கொண்டு வரும் பட்சத்தில், அந்த எழுத்தரின் விவரங்கள், ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது கேட்கப்படும்.

(iii) தேர்வாணையத்தின் உதவி எழுத்தர் மற்றும் தேர்வரின் சொந்த உதவி எழுத்தரின் கல்வித் தகுதி, யுபிஎஸ்சி தேர்வின் குறைந்தபட்சத் தகுதி வரம்பைவிட அதிகமாக இருக்கக்கூடாது. அதேவேளையில், உதவியாளரின் கல்வித் தகுதி மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

(iv) பார்வைத் திறன் குறைபாடு, கைகள் பாதிக்கப்பட்டவர்கள், பெருமூளை வாதம் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் தேர்வின் ஒரு மணி நேரத்துக்கு கூடுதலாக இருபது நிமிடங்கள் பெற தகுதிபெற்றவர்கள்.

அரசு சுகாதார நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி அல்லது மருத்துவக் கண்காணிப்பாளரிடமிருந்து தான் குறைபாடு உடையவர் என்ற சான்றிதழைச் சமர்ப்பித்தால் தேர்வர் தகுதியுடையவாராக கருதப்படுவார்கள்.

2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் (RPwD) உரிமைகள் சட்டத்தின் பிரிவு 2 கீழ் குறிப்பிட்ட குறைபாடுகள் உள்ள தேர்வர்களுக்கு, அதாவது 40 சதவிகிதக்கும் குறைவான குறைபாடு தேர்வர்கள் தேர்வு எழுதுவதில் சிரமம் உள்ள நபர்கள், தகுதிவாய்ந்த மருத்துவ அதிகாரியிடமிருந்து எழுதுவதற்கு சான்றிதழை சமர்ப்பித்தால் கூடுதல் நேரத்துக்குத் தகுதியுள்ளவராகக் கருதப்படுவர்.

(iv) தகுதியான தேர்வர்கள் விரும்பினால், அவர்களுக்கு எழுத்தர் வசதி மற்றும் / அல்லது கூடுதல் நேரம் வழங்கப்படும்.

யுபிஎஸ்சி: முதல்நிலை - முதன்மைத் தேர்வுக்கான பொதுவான வழிமுறைகள்! - 1
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை எத்தனை முறை எழுதலாம்? வயது வரம்பு என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com