12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

யுபிஎஸ்சி: நேர்காணல் / ஆளுமைத் தேர்வு எதற்காக?

யுபிஎஸ்சி தேர்வில் நேர்காணல் / ஆளுமைத் தேர்வு எவ்வாறு நடத்தப்படும்? என்பதைப் பற்றி...

யுபிஎஸ்சி நேர்காணல்.

Published On :

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வில் முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்குத் தகுதி பெறுவர்.

நேர்காணல் / ஆளுமைத் தேர்வு

1. முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வரை நேர்காணல் செய்யும் தேர்வு வாரியம் தேர்வரின் வாழ்க்கை, அவரின் தொழில் குறித்த பதிவுகளை வைத்திருக்கும்.

நேர்காணலில் பொதுநலன் சார்ந்த கேள்விகள் அவர்களிடம் கேட்கப்படும். திறமையான மற்றும் பாரபட்சமில்லாத பார்வையாளர்கள் குழுவால் பொது சேவையில் ஈடுபடவுள்ள பணியாளரின் தகுதியை மதிப்பிடுவதே நேர்காணல் / ஆளுமைத் தேர்வின் நோக்கம்.

நேர்காணல் / ஆளுமைத் தேர்வு என்பது தேர்வரின் மனத் திறனை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அறிவார்ந்த திறன் மட்டுமின்றி, சமூக, நடப்பு நிகழ்வுகளில் உள்ள ஆர்வத்தையும் மதிப்பிடுவதாகும்.

விழிப்புணர்வு, ஒருங்கிணைப்பு, தெளிவான விளக்கம், தீர்ப்பளிப்பதில் சமநிலையான போக்கு, பன்முகத்தன்மை கொண்ட ஆர்வம், சமூக ஒற்றுமை, தலைமைத்துவத் திறன், அறிவார்ந்த தார்மிக ஒருமைப்பாடு ஆகியவைகளும் இந்த நேர்காணலில் மதிப்பிடப்படும்.

2. நேர்காணல் / ஆளுமை சோதனை என்பது மிகவும் கடுமையாகவும், குறுக்கு விசாரணை போன்றோ இருக்காது. ஆனால், அதற்கு மாற்றாக தேர்வரின் மனநிலை, குணங்களை வெளிப்படுத்தும் நோக்கில் இயல்பான உரையாடலாக இருக்கும்.

3. நேர்காணல் / ஆளுமைத் தேர்வு என்பது தேர்வர்களின் அறிவைச் சோதிப்பதற்கான ஒரு தேர்வு அல்ல; அவர்களின் அறிவு ஏற்கனவே எழுத்துத் தேர்வுகளின் மூலம் சோதிக்கப்பட்டுவிட்டது.

தேர்வர்கள் தாங்கள் படித்த கல்வியறிவின் சிறப்புப் பாடங்களில் மட்டுமல்லாமல், தங்களின் மாநிலம், நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் நடப்பு நிகழ்வுகளிலும், புதிய நவீன கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்டிருக்கிறார்களா என்பதற்காக சோதிக்கப்படுகிறது.

Summary

Candidates who pass the preliminary examination and main examination of the Civil Services Examination conducted by the Central Public Service Commission will be eligible for the interview.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.