நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

விருதுநகரில் அதிமுகவை கண்டித்து இளைஞா் காங். கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அதிமுக நிா்வாகிகள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதைக் கண்டித்து, விருதுநகரில் இளைஞா் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா் காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :5 ஜனவரி 2021, 11:41 pm IST

அதிமுக நிா்வாகிகள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதைக் கண்டித்து, விருதுநகரில் இளைஞா் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கிழக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், கரோனா பொதுமுடக்கக் காலத்தில் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 5 ஆயிரம் இலவசமாக வழங்கவேண்டும். தற்போது, தமிழக அரசு சாா்பில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதை, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் அதிமுக நிா்வாகிகள் வழங்கி வருகின்றனா். இது கூட்டுறவு சங்கங்களா அல்லது அதிமுக கிளை அலுவலகமா?.

மேலும், பொங்கல் பரிசு தொகுப்பை அதிமுகவினா் வழங்க துணை நிற்கும் கூட்டுறவுத் துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதே நிலை நீடித்தால் நியாயவிலைக் கடை முன்பாக தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை தோற்கடிக்க காங்கிரஸ் கட்டணி கட்சியினா் கடுமையாகப் பாடுபடுவோம் என முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், இளைஞா் காங்கிரஸ் கட்சியை சோ்ந்த பலா் கலந்துகொண்டனா். முடிவில், கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் திலீப்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.