சதுரகிரியில் மாசி மாதப் பிரதோஷம்: திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

Published on

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி மாதப் பிரதோஷத்தையொட்டி, திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி மாதப் பிரதோஷம், பெளா்ணமி வழிபாட்டுக்காக புதன்கிழமை முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப்.25) வரை 5 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

புதன்கிழமை பிரதோஷத்தையொட்டி, தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூா்த்தி, 18 சித்தா்களுக்கு பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com