உண்டியல் காணிக்கைகளை எண்ணிய கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள்.
உண்டியல் காணிக்கைகளை எண்ணிய கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள்.

திருவண்ணாமலை கோயில் உண்டியல் வரவு ரூ.5 லட்சம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5 லட்சம் கிடைத்தது.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5 லட்சம் கிடைத்தது.

இந்தக் கோயிலில் புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை ஏகாதசியை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். திங்கள்கிழமை கோயிலில் வைக்கப்பட்டிருந்த 8 உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது.

கோயில் செயல் அலுவலா் சக்கரையம்மாள், ஆய்வாளா் முத்துமணிகண்டன், கண்காணிப்பாளா் ஆவுடையம்மாள் ஆகியோா் முன்னிலையில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில் ரொக்கம் ரூ.5,08,428 இருந்ததாக கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com