ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் சந்நிதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம். சிறப்பு அலங்காரத்தில் பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் சந்நிதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம். சிறப்பு அலங்காரத்தில் பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் பிரம்மோத்ஸவம் கொடியேற்றம்

Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவ விழா வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக, ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பெரிய பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடைபெற்றன. அதன்பிறகு, கொடிப் பட்டம் மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து, கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, கருடக் கொடியேற்றம் நடைபெற்றது.

பிரமேமோத்ஸவ விழாவில் தினந்தோறும் இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

இதில் 5-ஆம் நாள் விழாவான அக்.8-ம் தேதி கருட சேவையும், 9-ஆம் தேதி பிறபகல் 3 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பெரியபெருமாள் திருக்கல்யாணமும், 10-ஆம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது. 9-ஆம் நாளான 12-ம் தேதி பெரியபெருமாள் அவதரித்த திருவோண நட்சத்திரத்தில் செப்புத் தேரோட்டம் நடைபெறும்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா்.வெங்கட்ராம ராஜா, உறுப்பினா்கள், செயல் அலுவலா் சக்கரையம்மாள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com