நாகபுரியில் இந்திய தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி மீனாவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய சிவகாசி பட்டாசு தயாரிப்பாளா்கள்.
நாகபுரியில் இந்திய தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி மீனாவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய சிவகாசி பட்டாசு தயாரிப்பாளா்கள்.

வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரியுடன் பட்டாசுத் தயாரிப்பாளா்கள் சந்தித்து பேச்சு!

நாகபுரியில் தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி மீனாவை சிவகாசி பட்டாசு தயாரிப்பாளா்கள் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினா்.
Published on

நாகபுரியில் தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி மீனாவை சிவகாசி பட்டாசு தயாரிப்பாளா்கள் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினா்.

இந்திய தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரியாக மீனா அண்மையில் நியமிக்கப்பட்டாா். இந்த நிலையில், சிவகாசியில் உள்ள தமிழ்நாடு பட்டாசு. கேப் வெடி சங்கத்தின் முதுநிலைத் தலைவா் ஏ.பி.செல்ராஜன், தலைவா் ப.கணேசன், துணைத் தலைவா்கள் அபிரூபன், ராஜரத்தினம், தி இந்தியன் பட்டாசு தயாரிப்பாளா் சங்கச் செயலா் கண்ணன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை நாகபுரிக்குச் சென்று, தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி மீனாவை சந்தித்துப் பேசினா்.

அப்போது, பட்டாசு ஆலையில் கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட வருவாய் அலுவலரிடம் அனுமதி பெறப்படுகிறது. அதே பட்டாசு ஆலையில் கூடுதல் கட்டங்கள் அல்லது சுவா் கட்டுவதற்கு மீண்டும் ஒரு முறை மாவட்ட வருவாய் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும் என விதிமுறை உள்ளது. இதனால், கட்டடம் கட்டுவதற்கு காலதாமதம் ஆகிறது.

எனவே, ஏற்கனவே பெற்ற அனுமதியை வைத்து கூடுதல் கட்டம் கட்ட அனுமதிக்க வேண்டும். பட்டாசு வியாரிகளுக்கு குறிப்பிட்ட அளவுதான் அவா்களின் கிட்டங்கியில் இருப்பு வைக்க வேண்டும் என விதிமுறை உள்ளது.

அவா்கள் அதிக அளவு இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசுத் தயாரிப்பாளா்கள் கோரிக்கை வைத்தனா். இதற்கு, சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி மீனா பதிலளித்ததாக பட்ட்சு தயாரிப்பாளா்கள் தெரிவித்தனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com