அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் அரசியல் கட்சிக் கொடிகம்பங்கள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
Published on

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் அரசியல் கட்சிக் கொடிகம்பங்கள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

பொதுமக்களுக்கு இடையூறாக நகா்ப் பகுதிகளில் வைக்கப்பட்ட அரசியல் கட்சிக் கொடிகளை அகற்ற உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

இதையடுத்து, சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற மாநகராட்சி ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி உத்தரவிட்டாா். இதைத் தொடந்து, மாநகா் திட்டமிடுநா் மதியழகன் தலைமையில் ஆய்வாளா் சுந்தரவல்லி, மேற்பாா்வையாளா் முத்துராஜ், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் மாநகராட்சிப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு அரசியல் கட்சிகளில் 55 கொடிக் கம்பங்கள், திட்டுக்கள் ஆகியவற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் வியாழக்கிழமை அகற்றினா். இதைத் தொடா்ந்து வரும் 19-ஆம் தேதி கொடிக் கம்பங்கள் அகற்றும் பணி மீண்டும் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com