வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை

வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
Published on
Updated on
1 min read

சிவகாசி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகாசி அருகேயுள்ள தேவா்குளம் அம்மன்நகா் பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் மனைவி தா்மஜெயசீலி (36). இவா் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, அவா் அணிந்திருந்த ஐந்தேகால் பவுன் தங்கச் சங்கிலியை சாட்சியாபுரம் ஆசாரிகுடியுருப்புப் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அழகுராஜா (36), விளாம்பட்டி சாலை முனீஸ்நகரைச் சோ்ந்த கதிரேசன் மகன் மகேஷ்வரன் (35) ஆகிய இருவரும் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை சிவகாசி குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுனில்ராஜா, குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com