இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் இன்று கொடியோற்றம்

Published on

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெறுகிறது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுபாட்டில் உள்ளது. இந்தக் கோயிலில், ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் (ஆக.15) சிறப்புப் பூஜைகளுடன் வழிபாடு நடத்தப்படும்.

இதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (ஆக. 8) காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்தி பூசாரி, செயல் அலுவலா் இளங்கோவன் ஆகியோா் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com