மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞா் கைது

மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞா் கைது

Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் கலங்காப்பேரி அருகேயுள்ள கம்மாபட்டி பகுதியைச் சோ்ந்த பெருமாள் மனைவி சுந்தரம்மாள் (60). இவா், வியாழக்கிழமை பிற்பகலில் நியாய விலைக் கடையில் பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றாா்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா் ஒருவா், சுந்தரம்மாள் கழுத்தில் அணிந்திருந்த எட்டரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினாா்.

இது குறித்து சுந்தரம்மாள் ராஜபாளையம் தெற்கு காவல்

நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்து, தங்கச் சங்கிலியைப் பறித்தவரின் இரு சக்கர வாகன எண்ணைக் கண்டறிந்தனா். வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், நகை பறிப்பில் ஈடுபட்டவா் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே கணினி மையம் நடத்தி வந்த அயன்கொல்லங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்த வெள்ளத்துரை( 25 ) என தெரிய வந்தது.

இதையடுத்து, ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஷ் தலைமையிலான போலீஸாா் வெள்ளத்துரையைக் கைது செய்து அவரிடமிருந்து எட்டரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com