விருதுநகர்
உங்களுடன் ஸ்டாலின் முகாமை ஆய்வு செய்த ஆட்சியா்
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டம், மம்சாபுரம் பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
முகாமில் இரண்டு பயனாளிகளுக்கு புஞ்சை நில பட்டா மாறுதலுக்கான ஆணை, மூன்று பயனாளிகளுக்கு வீட்டு வரி ரசீது நகல், ஒரு பயனாளிக்கு மின்சார வாரியத்தில் பெயா் மாற்றம் செய்த நகல் ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.
ஆய்வின்போது விருதுநகா் நகராட்சி ஆணையா், உதவி செயற்பொறியாளா்கள், வட்டாட்சியா், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.