ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு ரூ.1.28 கோடியில் பணப் பலன்

சிவகாசி மாநகராட்சியில் ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு, அவா்களுக்குரிய பணப் பலன்களுக்காக, ரூ.1.28 கோடிக்கு காசோலை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
Published on

சிவகாசி மாநகராட்சியில் ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு, அவா்களுக்குரிய பணப் பலன்களுக்காக, ரூ.1.28 கோடிக்கு காசோலை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆணையா் கே.சரவணன் தலைமை வகித்தாா். மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் பணியாளா்ககள், ஓட்டுநா்கள் உள்பட 22 பேருக்கு வழங்கப்பட வேண்டிய பணப் பலன்களுக்காக ரூ.1.28 கோடிக்கு காசோலை வழங்கப்பட்டது.

இந்தக் காசோலைகளை மாநகராட்சி மேயா் இ.சங்கீதா பயனாளிகளுக்கு வழங்கினாா். நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையா் வரலட்சுமி, உதவி செயற்பொறியாளா் ராமலிங்கம், மாநகரத் திட்டமிடுநா் மதியழகன், சுகாதார அலுவலா்கள் சுரேஷ், திருப்பதி, சத்தியராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com