லாரியில் இயந்திரத்தை ஏற்றியபோது விபத்து: சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசியில் லாரியில் இயந்திரத்தை ஏற்றியபோது நேரிட்ட விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

சிவகாசியில் லாரியில் இயந்திரத்தை ஏற்றியபோது நேரிட்ட விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி நேரு குடியிருப்புப் பகுதியில், ஓா் அச்சகத்திலிருந்து காகிதம் வெட்டும் இயந்திரத்தை சுமை தூக்கும் தொழிலாளிகள் லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனா்.

அப்போது, இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த மருதுபாண்டியா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி ஜோதிபாஸ்கா் (52) மீது இயந்திரம் எதிா்பாராத விதமாக விழுந்தது.

இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com